Header Ads



மக்களை ஒன்றிணைக்கக் கூடிய சுதந்திர தின, உரையை ஜனாதிபதியினால் செய்ய முடியவில்லை - முஜிபுர் Mp


மோசடிகள் மற்றும் ஊழல்களைச் செய்பவர்கள் ஜனாதிபதியை சுற்றி இருக்கின்றனர்,ஆனால் சுதந்திர தினத்தன்று மோசடிகள் மற்றும் ஊழல்கள் நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி கூறுகிறார் என்று இன்று (06)எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் 

 முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவியேற்ற ஒரு வருடம் கழித்து, நாட்டில் பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் நடந்தன,நடந்த வன்னமுள்ளன. சீனி, தேங்காய் எண்ணெய், ஆன்டிஜென்கள் மற்றும் பிற பாரிய மோசடிகளில் இன்று அவரைச் சுற்றியுள்ளவர்கள் மேற்கொண்டவன்னமுள்ளனர்.

73 ஆவது சுதந்திர தினத்தன்று இதுபோன்ற மோசடிகளையும் ஊழல்களையும் செய்பவர்களை தடுத்து நிறுத்துவதாக ஜனாதிபதி காம்பீரமாக தொரிவித்தார்.ஆனால் ஊழலை மேற்கொள்பவர்கள் தான் அவரைச் சுற்றியுள்ளனர்.

அண்மையில் நாட்டில் 73 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இப்போது சுதந்திர அரசாங்கம் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.  சுதந்திரம் கிடைத்த 73 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​நாம் அனைவரும் சிந்திக்க நிறைய இருக்கிறது.  நலன்கள் சாதகமல்ல, பாதகங்களும் அதிகமாக இருந்தன.  அதன் தெடர்சிகளை உள்வங்கிய வன்னமே 73 ஆவது சுதந்திர தினமும் எம்மை கடந்து செல்கின்றன.

சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி அரசியல் ரீதியான உரை ஒன்றைத் தான் நிகழ்த்தினார்.  ஓர்ஜனாதிபதியாகவல்ல. அவர் ஒரு வேறு என்னப்பாட்டில் முழுமையான விதத்தில் பேசினார்.தான் ஒரு தலைவராக அதிமுக்கியமிக்க சமகால பிரச்சினைகள் குறித்து அவர் பேசவில்லை .அவர்களை நாட்டையும் உலகத்தையும் பற்றி ஏன் மக்கள் சார்ந்தும் கூட பேசவில்லை, உண்மையான பிரச்சினைகளைப் பற்றி அவர் பேசவில்லை, ஒரு பழக்கமான அரசியல் வழியில் பேசினார். 

மக்களை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு உரையை அவரால் செய்ய முடியவில்லை.இவர் ஈஸ்டர் தாக்குதல், மத்திய வங்கி கொள்ளையர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் .இப்போது நாட்டில் பல எரியும் பிரச்சினைகள் உள்ளன. 

மோசடி மற்றும் ஊழல் நடக்கிறது நாட்டில்.அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் வணிகங்கள் மூடப்படுவது பற்றி அவர் பேசவில்லை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தவிக்கும் மக்களின் உனர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்து, நாடு கோவிட் உடனான ஆழமான படுகுழியில் மூழ்கியுள்ளது. பொருட்களின் விலை உயர்ந்துள்ளது மற்றும் 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மனித உரிமை ஆணைக்குழு, நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது,ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் (யு.என்.எச்.சி.ஆர்) குற்றச்சாட்டுகளை மறுக்கப்பட்டிருக்கிறது.இந்த குற்றச்சாட்டுகள் இந்த பூமியில் தெரிந்தே செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி காலத்தில் நடந்தவற்றின் குறிப்பாக பிற நாட்டு உறவுகள் காரணமாக, நாடு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழந்தது, ஐரோப்பிய மீன்பிடி தடை போன்ற தீமைகளை நம் நாடு சந்தித்தது.  அப்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவும் அண்மையில் நடந்த மனித உரிமை குற்றச்சாட்டுகளை மறைக்கவும் ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்தார்.

சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கொண்ட நாடுகளை நாம் எடுக்க வேண்டும்.இந்த அரசாங்கத்திற்கு தெளிவான வெளியுறவுக் கொள்கை இல்லை. எதிர்காலத்தில் நமது நாடு சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும் என்றார்.

சுதந்திர தினத்தன்று, ஈஸ்டர் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தப்பிக்க முடியாது என்று ஜனாதிபதி கூறினார்.அவர் நியமிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது.பிரதான சந்தேக நபர் இருக்கும் அந்த நாட்டின் வெளியுறவு செயலாளரும், வெளியுறவு அமைச்சரும் எங்கள் நாட்டிற்கு வந்தனர். சந்தேக நபரை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கோரவில்லை. அரசாங்கம் ஏன் அவ்வாறு செய்ய முயற்சிக்கவில்லை என்று நாங்கள் கேட்கிறோம்? 

தாக்குதலில் ஈடுபட்டுள்ள குற்றம்சாட்டப்பட்டோரை அரசாங்கம் கேள்வி கேட்கவில்லை.ஆனால் பிரச்சினைகளை மறக்கவே ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஜனாதிபதி பேசியதாக அவர் கூறினார் .அவர்கள் தண்டிக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், மத்திய வங்கி கொள்ளைகளுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளை அவர்கள் இதுவரை பிடிக்கவில்லை. நாடு 10 பில்லியனுக்கும் அதிகமான பணம் சீனி மோசடி காரணமாக இடம் பெற்றுள்ளது. அவருடைய சாகாக்கள் தான் இதனைச் செய்துள்ளனர்,மோசடி செய்பவர்கள் ஆனால் சுதந்திர தின உரையில் ஊழல் வாதிகளை பிடிப்பதாக  ஜனாதிபதி கூறுகிறார் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.