Header Ads



ஜனநாயக விரோத மியன்மார் அதிகார மாற்றத்தை புறக்கணிப்போம்


மியன்மாரில் இடம் பெற்ற சூழ்ச்சி மிக்க அதிகார மாற்றத்தை,ஜனநாயகத்தை மதிக்கும் ஜனநாயக கோட்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி இதை முற்றாக நிராகரிப்பதோடு,சூழ்ச்சி மிக்க அந் நிகழ்வை மானுட வாழ் உலகத்தவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் எமது நிச்சயமாகும்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மியன்மார் தேர்தலில் அவுன் சான் சூ கீ தலைமையிலான நொஷனல் லீக் ஒப் டெமொக்ரசிக் கட்சி 80% வெற்றியை பெற்றுக் கொண்டது.அதன் பிரகாரம் தொல்லை மிக்க இராணுவ ஆட்சி முடிவுற்றதும் ஏற்பட்ட மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பது ஜனநாயகத்தை விரும்பும் சகல தரப்பினதும் பொறுப்பாகும்.

ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் இல்லாமலாக்குவதற்கும் ஜனநாயகத்தை மதிக்கும் உலகில் அதனை ஒன்றித்த ஏற்பாடுகள் இருக்கும் நிலையில், அந்த சகல ஏற்பாடுகளும் மக்கள் ஆணையால் போஷிக்கப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

என்றாலும்,அத்தகைய சகல முறைமைகளுக்கும் பதிலாக இராணுவ ஜுன்டா ஒன்றின் மூலம் ஒர் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக சூழ்ச்சியின் மூலம் பெற்றுக் கொள்வது மானுட சமூகத்திற்கு ஏற்படுத்தும் பலமான துன்பமாகும்.

என்றாலும் உலகளவில் இவ்வாறான துஷ்ட நிகழ்வுகள் அரங்கேரிய போது அமைதியான முறையில் ஆட்சியாளர்களுக்கு நேரடியாக சவால் விடுத்தது முற்போக்கு சித்தனைகளால் அநுபவம் பெற்ற மனிதர்களால் ஆகும்.மானிட விழுமியங்களின் குறைந்த பெறுமானங்களைக் கூட கருத்திற் கொள்ளாது தமது செந்த நலன்களை போஷிப்பதற்கு கூக்குரல் இடும் ஆட்சியாளர்களுக்கு இறுதியில் கிடைக்கப் பெறுவது இருன்ட வரலாறுகளாகும்.

அந்த வகையில் மியன்மாரில் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதும்,அரசியலமைப்பு சார் பாராளுமன்ற முறைமைகளுக்கு சவால் விடுக்காமல் இருப்பதற்கும்,வரையறையின்றி மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கள்களை உடனே நிறுத்துவதற்குமுன்டான ஏற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.

சம கால உலகில் நிலைபேறானது பலாத்காரமன்று மாறாக நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகம் என்பவற்றின் மூலமாகும் என்பதோடு அதற்காக நாங்கள் முன் நிற்ப்போம் என்றும் கூறுகிறோம்.

ரஞ்சித் மத்தும பண்டார,

பொதுச் செயலாளர்,

ஐக்கிய மக்கள் சக்தி

1 comment:

  1. Disciplined military rule is batter than the cheating politicians' rule?

    ReplyDelete

Powered by Blogger.