Header Ads



குவைத் வாழ் இலங்கையர்களினால், மரம் நடும் நிகழ்வு - தூதரக அதிகாரிகளும் பங்கேற்பு


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குவைத் வாழ்  இலங்கையர்களை மையப்படுத்தி SLK ஆகிய THE SOCIETY OF ALL SRI LANKANS IN KUWAIT எனும் அமைப்பினூடாக மரம் நடுவோம் நாட்டை காப்போம் என்ற தொனிப் பொருளில் மேற்கொள்ளப்பட்ட மரம் நடும் நிகழ்வு குவைத்தின் சால்மியா பிரதேசத்தில் உள்ள  ஒரு பூங்காவில்  இடம் பெற்றது. 

இந் நிகழ்வில் குவைத்தில் இருக்கும்  இலங்கையின் சர்வமத தலைவர்கள் உட்பட குவைத் தூதுவராலயத்தின் தூதுவர் மொஹம்மட் ஜஃபர் மற்றும் உயர் அதிகாரிகளில் ஒருவரான  போஷித்த பெரேரா  அவர்கள் உட்பட தூதுவராலயத்தின் பல உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்ததோடு மட்டமல்லாது, இலங்கை சார்ந்த பலவேறு சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தது நிகழ்வின் முக்கியம்சமாகும். 

இம் மரம் நடும் நிகழ்வில் இலங்கையின் தூதுவர் உட்பட இஸ்லாம், பெளத்த,  கிருஸ்துவ என சர்வமத தலைவர்களும் தத்தமது அழகிய கருத்துக்களை  முன்வைத்து சிறிய சொற்பொழிவை நிகழ்த்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

உண்மையில் கலந்து கொண்டோர் யாவரும் இந் நிகழ்வை பாராட்டியதோடு முஸ்லிம்களாகிய நாம்  எங்கு இருந்தாலும்  நாட்டு பற்றோடு வாழக்கூடியவர்களே என்பதற்கு இது போன்ற செயற்பாடு செயலளவில் அனைத்து இன மக்களுக்கும் பல்வேறு கருத்துக்களை தாங்கியதாகவே போய் சேரும் என்பதில் சந்தேகம் கிடையாது எனவும் கூறினர்.

இதன் பிரகாரம் குவைத் தூதுவராலயத்தின் தூதுவர் உட்பட ஏனைய உறுப்பினர்களுக்கும் , கலந்து கொண்ட சர்வமத தலைவர்களுக்கும், ஏனைய சங்கங்களின் சார்பில் கலந்து கொண்டோருக்கும், மற்றும் எமக்கு மரங்களை தானமாக வழங்கிய சகோதரர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். 

இந்த நிகழ்வானது குவைத் நாட்டு விவசாய அமைச்சின் உத்தியோக பூர்வ அனுமதியுடனேயே இடம் பெற்றது என்பதுடன் அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை ஞாபகப் படுத்திக்கொள்ள விரும்புகின்றோம்.  

சில நிகழ்வுகள் மூலமும்  செயல்கள் மூலமும் மக்களுக்கு பல செய்திகளை கூற முடிவது போன்று எமது இந்த நிகழ்வினூடாக மக்களுக்குரிய செய்தி யாதெனில்....

 உலகை , நாட்டை,   சூழலை  மனித நலனை,  நில வளத்தை பாதுகாக்க      !!!மரம் நடுவோம்!!!

 SLK பற்றிய சிறு ஓர் அறிமுகம் 

 SLK அமைப்பானது குவைத் நாட்டில்  இன மத மொழி இவைகளைத் தாண்டி அனைத்து உறவுகளையும் இணைத்துக் கொண்டு சகவாழ்வை மையப்படுத்தி பல்வேறு நிகழ்வுகளை செய்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பே இந்த SLK அமைப்பாகும் 

நன்றியுடன் நிர்வாக குழு 

( SLK )

 THE SOCIETY OF ALL SRI LANKANS IN KUWAIT


2 comments:

  1. kuwaitla marattha naatti sri lankavukku konduwanthu wilpatthula nattuwanka ...... thevaithana ithu , nammada janazakkala patthawaikiranka athukku maram walarthu kodukkiranka....

    ReplyDelete

Powered by Blogger.