February 14, 2021

கொரோனாவினால் முஸ்லீம்கள் மாத்திரம் மரணிக்கவில்லை, பிரதமர் ஜனாசா தொடர்பில் எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை - அஹமட் புர்க்கான்


- பாறுக் ஷிஹான் -

கொவிட் 19 காரணமாக முஸ்லீம்கள் மாத்திரம் மரணிக்க வில்லை.தமிழர்களும் மரணிக்கின்றார்கள்.கிறிஸ்தவர்கள்  பௌத்தர்களும் மரணிக்கின்றார்கள்.எனவே பிரதமர் பாராளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியானது அனைவருக்கும் பொதுவானது என்பதையே நாம் கருத வேண்டும்.எந்தவொரு சந்தரப்பத்திலும் பிரதமர் தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களுக்கு ஜனாசா விடயம் தொடர்பில் எவ்வித  வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை என  ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்தார்.

ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் பிரதமர் தெரிவித்த கருத்து  தொடர்பில்  கல்முனையில் அமைந்துள்ள  மத்திய குழு காரியாலயத்தில்  இன்று(14) ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு    மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

தேர்தல் காலங்கள் வருகின்ற போது முஸ்லீம் சமூகத்தை  தலைமை தாங்க கூடியவர்கள் தனிநபர் அபிலாசைகளை நிறைவேற்றி கொள்வதற்காக அல்லது தனிநபர் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லீம் சமூகத்தை பிழையாக வழிநடாத்திய பிரதிஉபகாரத்திற்காக தான் இன்று அரசாங்கத்தினால் முஸ்லீம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்கின்ற பார்வை முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் இருக்கின்றது.அதுமாத்திரமன்றி முஸ்லீம்களுக்கு எவ்வாறான வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்றுக்கொண்டார்களோ அதற்கு எதிர்மாறாக அரசாங்கத்துடன் அவர்கள்  சென்று ஆதரவளித்தமையினால் முஸ்லீம்கள் இவர்களிடம் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.தற்போது பல்வேறு தரப்பினரும் ஜனாசா விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து  வருகின்றனர்.

உண்மையில் சர்வதேசத்தின் அழுத்தத்தினால் தான் பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமர் ஜனாசா அடக்கத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதாக கருத்துப்பட இன்று சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றது.சர்வதேசத்திற்கு உண்மையில் பயந்து அச்சப்பட்டு ஒரு வாக்குறுதியை கொடுக்கின்ற தலைவராக மஹிந்த ராஜபக்ஸ இருந்ததில்லை.அவ்வாறு சர்வதேச நாடுகளுக்கு பயந்திருந்தால் அவர் கடந்த இறுதி யுத்தத்தினை வெற்றி கண்டிருக்க முடியாது என்கின்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுமாத்திரமன்றி இந்த நாட்டில் கொவிட் 19 காரணமாக முஸ்லீம்கள் மாத்திரம் மரணிக்கவில்லை.முஸ்லீம்களின் மார்க்கத்தில் ஜனாசா நல்லடக்கம் கட்டாயக்கடமை என்ற கோட்பாடுகளை மையப்படுத்தி அதீதமான  ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றார்கள்.எனெனில் அது மார்க்கத்தின் கட்டாயக்கடமையாக இருக்கின்றமையாகும்.பிரதமர் பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பாக வாக்குறுதி அளித்த என்ற விடயம் நாட்டிலுள்ள அனைவருக்கும் அவர் வழங்கி இருக்கின்றார்.ஆனால் முஸ்லீம்களுக்கு மாத்திரம் அல்ல என்பதை சகல தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.உண்மையில் கொவிட் 19 காரணமாக முஸ்லீம்கள் மாத்திரம் மரணிக்க வில்லை.தமிழர்களும் மரணிக்கின்றார்கள்.கிறிஸ்தவர்கள்  பௌத்தர்களும் மரணிக்கின்றார்கள்.எனவே பிரதமர் பாராளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியானது அனைவருக்கும் பொதுவானது என்பதையே நாம் கருத வேண்டும்.எந்தவொரு சந்தரப்பத்திலும் பிரதமர் தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களுக்கு ஜனாசா விடயம் தொடர்பில் எவ்வித  வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை என்பதை அரசியல் தலைவர்கள் விளங்கி கொள்ள வேண்டும் என்பதை தெரிளவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்


12 கருத்துரைகள்:

Thambi....howmuch u received...? enough for today???

முதலில் உங்களுக்கு இந்த விடயத்தில் தெளிவிருக்க வேண்டும்.அதற்குப்பிறகு மக்களை தெளிவுபடுத்துங்கள்.

சாஆ என்னேவொறு விளக்கம். 😄😄😄😄

இவரெல்லாம் ஒரு சாமான் என்று இதையெல்லாம் செய்தியா வேற போடுறிங்க

அம்பாரை அதாவது திகாமடுல்ல மாவட்டத்தில் துறைபோக கற்ற எண்ணிறந்த முஸ்லிம் புத்திஜீவிகள் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை அதுபோல் Jaffna Muslim Online newspaper i வாசிப்பவரகளும் ஏனைய மாவட்டங்களைவிட இங்குதான் மிக அதிகம். இப்படியான நவீன முட்டாள் பையன்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடும் அங்கு வாழும் இஸ்லாமிய புத்திஜீவிகளுக்கே உண்டு. எனவே "பொருத்தமான" விதத்தில் இவருக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் இந்த மக்களையே சார்ந்துள்ளது.

Mr. Furkhan

Please get the Facts straight before making silly statements.

The PM was replying to a question by MP S.M. Marikkar which was:

"Will the government allow to bury the Muslims who succumbed to the viral disease?"

The PM's response was:

“Honorable MP, Permission will be granted to bury the dead.”

Remember, the question was specific about the Muslims and the answer must also be regarded as being specific to Muslims.

In any case, while no others objected to Cremation, it is ONLY the Muslims who objected and even in the wildest imagination, the PM's reply cannot be regarded as applying to all and not just the Muslims as you are propagating.

As a matter of interest, what is the purpose of your twisted argument? Are you trying to say that the Muslim community should NOT consider the PM as having some concerns about the problems of Muslims and thus belittle whatever appreciation the PM would have earned from the Muslim community by stating the Burial of Muslim Corona victims will be allowed?

But the Most IMPORTANT point is that it appears that the PM's promise will not see the light of the day as there appear to be other forces within the Govt. working to sabotage the PM's Undertaking. As an important member of the SLPP from Kalmunai, and being a Muslim, do you have any plan of action to ensure that the PM's Promise is Fulfilled and NOT Sabotaged?

Ivan sivappuththoppikku aduththa loosup payal, muthalla ottakaththula vanthaan yaarum thirumpip paakkalla, ippayaavathu ennasari kedekkumundu ularraan. avanak kanekkedukkaatheenka....

Furkhan is a foolish person.We don't need to take his blubbering as serious.He has to say something for what he was paid.

இன்னொரு ராஜபக்ச பற்றாளரோ.....
மறுமையொன்று உண்டு ராசா
பயந்து கொள்

OMG... another musammil weeravansa is rising up,,

OMG... another musammil weeravansa is rising up,,

Post a Comment