Header Ads



வழிகாட்டல்களை வெளியிடும் வரை, ஜனாசாக்களை அடக்க முடியாது - குளிரூட்டிகளில் வைத்திருக்க முடியும்


கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குரிய வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டதன் பின்னரே, அனுமதி வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

உடல்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை எதிர்வரும் நாட்களில் தெரிவு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

நீர் நிலைகள் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து இடங்களை தெரிவு செய்ததன் பின்னர், அதனை சுகாதார அமைச்சர், செயலாளர் மற்றும் ஜனாதிபதி தலைமையிலான COVID செயலணிக்கு சமர்ப்பித்து, அதற்கு அனுமதி பெற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் கூறினார்.

இதற்கான வழிகாட்டியை வௌியிடும் வரை COVID-இனால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாது எனவும், இடத்தை தெரிவு செய்ய வேண்டியிருப்பதே அதற்கான பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதுவரை உடல்களை வைத்தியசாலைகளின் குளிரூட்டிகளில் வைத்திருக்க முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

3 comments:

  1. மனித உரிமை சபையின் வாக்களிப்பு வரை இழுத்தடிப்பது போலும் சந்தேகம் வருகிறது.

    ReplyDelete
  2. Obviously, the Sinhala Racists seem to be having the last word. Shouldn't our Community Leaders come up with a proposal to carry out the Burial inside a concreted area Filled with sand, either Above or Below Ground Level, as a temporary measure?

    ReplyDelete
  3. "அரசன் உத்தரவும் ஏவலாளியின் மேதாவித்தனமும்" - இதில் அரசனின் பங்களிப்பும் இருக்கலாம்.
    ,

    ,
    ,jid

    ReplyDelete

Powered by Blogger.