Header Ads



இலங்கையில் பாஜக ஆட்சியை நிறுவ, அமித்ஷா திட்டமிட்டான் - திரிபுரா முதலமைச்சரின் கருத்தினால் சர்ச்சை


இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சர் இலங்கையிலும் நேபாளத்திலும் பாஜக அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் குறித்து தெரிவித்தார் என பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பாஜகவிற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய சந்திப்பின்போதுபாஜக பல மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டபோது இலங்கையும் நேபாளமும் மிச்சமிருக்கின்றன என அமித்சா தெரிவித்தார், நாங்கள் இலங்கையிலும் நேபாளத்திலும் நாங்கள் கட்சியை விஸ்தரிக்கவேண்டும் அங்கு ஆட்சியை அமைப்பதற்காக வெற்றிபெறவேண்டும் என தெரிவித்தார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ள இந்த கருத்து குறித்து மத்திய அரசாங்கம் விளக்கம் அளிக்கவேண்டும் என திரிபுராவின் எதிர்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதலமைச்சருகு ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு குறித்து எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ள எதிர்கட்சி அமித்சாவின் கருத்துக்கள் வெளிநாடு ஒன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என குறிப்பிட்டுள்ளது.


1 comment:

  1. இந்து சமேலனம் போன்ற தீவிரவாத இயக்கங்கள் இதன் ஒரு அங்கமாகவா இங்கு களமிறக்கபட்டுள்ளது?

    ReplyDelete

Powered by Blogger.