Header Ads



இலங்கை தொடர்பில் ஐ.நா. நிபுணர்கள் கூட்டாக விடுத்துள்ள வேண்டுகோள்


இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை ஐக்கியநாடுகள் மனித உரிமைபேரவையும் சர்வதேச சமூகமும்உயர்மட்ட கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் பலர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சர்வதேச பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் உட்பட இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஆராயுமாறு ஐக்கியநாடுகள் நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்தசில வருடங்களில் ஜனநாயக ஸ்தாபனங்களை மீளகட்டியெழுப்புவதில் கடினமாக போரடி இலங்கை அடைந்த முன்னேற்றங்கள் பாதிக்கப்படும நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறுத்தவேண்டும் எனவும் ஐநா நிபுணர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

2015 முதல் 2019 முதல் இலங்கைக்கு ஐநாநிபுணர்கள் மேற்கொண்டபத்து விஜயங்களின் பின்னர் முன்வைத்த 400பரிந்துரைகளிற்கு இலங்கை அளித்த பதில்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் நிபுணர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் மனித உரிமைகளை கண்காணிப்பதற்காக சுயாதீன மனித உரிமைகள் கண்காணிப்பை அதிகரிக்கவேண்டும்,கடந்தகால குற்றங்களிற்கு பொறுப்புக்கூறப்படுவதை உறுதிசெய்யவேண்டும் எனவும் ஐநா நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மனித உரிமை பேரவை மற்றும் உறுப்பு நாடுகள் சுயாதீன கண்காணிப்பை அதிகரிக்கவேண்டும்,இலங்கையில் மனித உரிமை நிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கையிடவேண்டும்,பக்கச்சார்பற்ற சுயாதீன சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


 


 

1 comment:

  1. போங்கடா நீங்களும் உங்கட கொள்கையும். இவனுகள் உலக சுகாதார அமைப்பு, ஐ.நா விஞஞான அறிவியல் இது ஒன்னையும் கேக்காம இஷ்டத்துக்கு ஆடுரானுகள்... நீங்களும் "பகலில் பசு மாடு தெரியாதவன் இருட்டுல எருமை மாடு பாக்க வந்தபோல" பேசிட்டு இருக்கீங்க

    ReplyDelete

Powered by Blogger.