Header Ads



கிண்ணியா, ஓட்டமாவடி, சம்மாந்துறை, இறக்காமம், மரிச்சுக்கட்டி, புளிச்சாக்குளம் - ஜனாஸாக்களை அடக்கத் தெரிவு செய்யப்பட்டன


- Anzir -

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின், உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக, இதுவரை 6 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தின.

1, கிண்ணியா

2, ஓட்டமாவடி

3, சம்மாந்துறை

4, இறக்காமம்

5, மரிச்சுக்கட்டி 

6, புளிச்சாக்குளம்

ஆகிய பகுதிகளே இவையாகும்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிரதமர் மகிந்தவிடம் கையளித்த சில பிரதேசங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

எனினும் இந்த பிரதேசங்களில் நிடித்தடி நீர் மட்டம் குறைவானது என உறுதி செய்யப்பட்ட பின்னர், நிபுணர் குழுவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் இணைந்து, இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார்கள் எனவும், அவ்வாறு மேற்கொள்ளப்படும் தீர்மானம் அடுத்தவாரம் அறிவிக்கப்படுமெனவும் மேலும் அறிய வருகிறது.

மேலும் சில பகுதிகள் அடையாளம் காணப்பட்ட போதிலும், சில கடும்போக்கு சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பதை கவனத்திற் கொண்டு, அப்பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. கட்டுரையில் குறிப்பிட பட்டுள்ள இடங்களில் இரண்டு இடங்கள் மறிச்சுக்கட்டி,புளிச்சங்குளம் ஜனாசா நல்லடக்கத்திற்கு இதட்கு முன்னாலும் பரிசீலனை செய்ய பட்டது!அந்த நேரம் சில தமிழ் அமைச்சர்களான சார்ள்ஸ் நிர்மானந்தம், அடைக்கல நாதன், சிவாஜி லிங்கம் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தமிழ் பிரதேசத்தில் கோரோனோவால் இறந்தவர்களை அடக்க முடியாது!அனுமதிக்க மாட்டோமென்று பார்க்கலாம்!பொதுவில் முதல் பொலி கண்டி வரை முஸ்லீம் கொடுத்த ஆதரவு ஒத்தாசைக்கு இந்த விடயத்தில் இவர்கள் நடவடிக்கையை அப்படி எதுவும் எதிர்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் எதிர்த்தால் இனியும் முஸ்லீம் தமிழ் உறவை மீளிணைக்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.