Header Ads



இலங்கையின் நெருங்கிய நண்பராக சீனா - அமைச்சர் தினேஷ் பாராட்டு


மனித உரிமைகள் என்ற போர்வையில் சில மேற்குலக நாடுகள், இலங்கை உள்ளிட்ட வளர்முக நாடுகளுக்கு அழுத்தம் பிரயோகிப்பதாக சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யி தெரிவித்துள்ளார்.

இதனை சீனா கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் சட்ட ரீதியான உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை ஒன்றிணைந்து பாதுகாப்பதற்கு சீனா அசைக்கமுடியாத உதவியை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையப்பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் நெருங்கிய நண்பராக, நாட்டின் பொருளதார அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கான சீனாவின் ஆதரவிற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

உள்ளக மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்கு சீனா, இலங்கைக்கு அதிக உதவிகளை வழங்கியுள்ளது.

இந்தநிலையில், அமெரிக்க உள்ளிட்ட சில மேற்குலக நாடுகள், சரியான ஆதாரங்களின்றி மனித உரிமைகள் காரணங்களை தெரிவித்து அழுத்தம் பிரயோகிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இதன்போது அவர் எடுத்துக்காட்டாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சர், சர்வதேச தொடர்புகள் குறித்த கட்டுப்பாட்டு முறைமையுடன், ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை மற்றும் நோக்கத்தை பாதுகாப்பதற்கு சீனா முன்னிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.