Header Ads



சாரா என்ற புலஸ்த்சினி இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளாரா..?


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சார என அழைக்கப்படும் புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவரின் மனைவி சாரா என அழைக்கப்படும் புலத்சினி இராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பியோடியிருந்த நிலையில் மீண்டும் கடல்மார்க்கமாக இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது.

கடல்வழியாகஇலங்கைக்கு வந்து சேர்ந்துள்ள புலத்சினி மன்னாரில் மூன்று இடங்களில் தங்கியிருந்த பின்னர் புத்தளத்திற்கு சென்று பின்னர் மட்டக்களப்பிற்கு சென்றுள்ளார் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே ஆணைக்குழு இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னமும் கைதுசெய்யப்படாமல் தப்பியுள்ளவர்கள்,பிணையில் விடுதலையானவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டு போதிய ஆதாரமின்மையால் விடுதலை செய்யப்பட்டவர்களை புலத்சினி சந்தித்துளு;ளார் என ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது.


 


3 comments:

  1. its a big drama going on????

    ReplyDelete
  2. சாரா வந்தாலும் இனி இலங்கையில் நீதி வராது saharan சா அதற்கு முதலே நீதி செத்து விட்டது

    ReplyDelete
  3. பாவம் சாரா ஒரு ஏழை மாணவி. அவளை படிக்கவைக்க பணம் தேடும் கனவோடு தாய் வெளிநாட்டு வேலைக்குப்போனயிருந்தபோது பாதகர்கள் புலஸ்தினியின் ஏழ்மையை பயன்படுத்தி மதம்மாற்றி மூளைச் சலவை செய்து பயங்கரவாதிகளுக்கு விற்ற பாதகனை பழிவாங்க அலைகிறாள்போல.

    ReplyDelete

Powered by Blogger.