Header Ads



இம்ரானின் உரை ரத்து,, இப்படியும் காரணம் கூறப்படுகிறது


- TL -

இலங்கை நாடாளுமன்றத்தில் பாக்கிஸ்தான் பிரதமரை உரையாற்றுவதற்கு அனுமதிப்பது இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை அரசாங்கத்தின் சிலர் கருதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்துச்செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

இலங்கை அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் பாக்கிஸ்தான் பிரதமரை இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிப்பது இந்தியாவுடனான உறவுகளை பாதிக்கும் என கருதியுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்ற உரையில் பாக்கிஸ்தான் பிரதமர் காஸ்மீர் விவகாரத்தை எழுப்பக்கூடும் என இந்தியா கருதலாம் என இலங்கை அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் கருதியுள்ளனர்.

காஸ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் உணர்வுபூர்வமான நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் காஸ்மீர் விவகாரத்தை பற்றி கருத்து தெரிவிப்பதை தவிர்த்துவருகின்றது.

ஆனால் பாக்கிஸ்தானை பொறுத்தவரை காஸ்மீர் விவகாரமே மிக முக்கியமானது.நாட்டின் வெளிவிவகார கொள்கையின் ஆதாரமாக அது காணப்படுகின்றது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் காஸ்மீர் விவகாரத்தினை எழுப்பினால் பாக்கிஸ்தானில் அது அவருக்கு அது பாராட்டையும் ஆதரவையும் பெற்றுக்கொடுக்கும்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான அனுமதியை பெறமுயல்வதன் மூலம் இம்ரான்கான் இந்திய பிரதமரிற்கு சமமான அந்தஸ்த்தினை பெறமுயலக்கூடும்.

ஆனால் பாக்கிஸ்தானையும் இந்தியாவையும் இலங்கை சமமாக கருதினால் புதுடில்லி அதற்கான தனது எதிர்ப்பை வெளியிடக்கூடும்.

3 comments:

  1. When Indian PM addressed in parliament, Sri Lanka never considered it will affect the relationship with Pakistan.We have to treat all the neighbours equally without being unofficial colony to another country.

    ReplyDelete
  2. Further, Imran Khan also might raise the Covid-19 victims issue and demand Burial of the Muslims and an immediate halt to Cremation

    ReplyDelete
  3. உரையாற்றுவது போக இலங்கைக்கு வருவதே அவமானம். பிரதமரின் அடக்கம் செய்யும் அறிவிப்பை வரவேற்று விட்டு அது இல்லை என்று ஆன பின் எந்த முகத்துடன் வருவது.

    ReplyDelete

Powered by Blogger.