Header Ads



இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை, ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளது: சிவசேனை தலைவன் தெரிவிப்பு


இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான நோக்கம் உள்ளதாக இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் BBC செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள இந்துத்துவவாதிகளுக்கே இவ்வாறான நோக்கம் உள்ளதாக தான் உறுதிபடக் கூறுவதாகவும் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கூறியதாக BBC செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் நேபாளத்திலும் அரசியல் செயற்பாடுகளை விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக அண்மையில் வௌியாகிய அறிவிப்பிற்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நேபாள வௌிவிவகார அமைச்சர் Pradeep Kumar Gyawali தமது ட்விட்டர் தளத்தில் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் உள்விவகார அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான அமித் ஷாவின் கருத்துக்களுக்கு நேபாள அரசு தனது எதிர்ப்பை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பதாகவும் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாளத்தின் எதிர்ப்பு குறித்து, இந்தியாவிற்கான நேபாள தூதுவர் Nilamber Acharya, இந்திய வெளிவிவகார அமைச்சின் நேபாள மற்றும் பூட்டானுக்கான இணைப்பு செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கை மற்றும் நேபாளத்தில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அமித் ஷா தெரிவித்ததாக, இந்திய திரிபுரா மாநில முதலமைச்சரும் பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவருமான Biplab Kumar Deb அண்மையில் தெரிவித்திருந்தார்.

4 comments:

  1. இந்த கிழட்டு ஜடத்தை பயங்கரவாத தடை சட்டத்தில் தூக்கி உள்ளே போடா வேண்டும்

    ReplyDelete
  2. முதலில் இவனை தூக்கில் இடவேண்டும் ஏனென்றால் இவன் மாட்டின் மாமிசத்திற்கு பதிலாக மாட்டின் மூத்திரமும் சாணமும் தின்கின்ற மனித மிருகம் சிவசேனை என்பது உலகில் மலம் பூக்கின்ற மதம் தான் இவன் பின்பற்றுவது இந்த நாயை இந்த நாட்டை விட்டு செருப்பால் அடித்து விரட்டுவது தான் மிகவும் சிறந்தது

    ReplyDelete
  3. NGK , M A L ,ஒரு பயங்கரவாதத்தை பின்பற்றும் இழிவான மதத்தை பின்பற்றும் இழி நாய்களான நீயெல்லாம் இந்து மதத்தை பற்றி பேசுகிறாய்.

    ReplyDelete
  4. NGK , M A L ,ஒரு பயங்கரவாதத்தை பின்பற்றும் இழிவான மதத்தை பின்பற்றும் இழி நாய்களான நீயெல்லாம் இந்து மதத்தை பற்றி பேசுகிறாய்.

    ReplyDelete

Powered by Blogger.