Header Ads



விமல் வீரவன்ச மீது, பொதுஜன பெரமுன கடும் விமர்சனம் - மன்னிப்பு கேட்க கோரிக்கை


விமல் வீரவன்ச, பொது மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -08- செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

பொதுஜன பெரமுன தொடர்பாக எவ்விதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளும் உரிமை விமல் வீரவங்சவிற்கு இல்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனவே அவருடைய அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுடன் அந்த கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

மேலும் கூட்டணியில் இணைந்துகொண்ட ஒருவர் மிக கீழ்த்தரமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறித்து கட்சி என்ற வகையில் கவலையடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

4 comments:

  1. இந்த இனவெறி பிடித்தவனுக்கு இவ்வரசில் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய நிலைகளில் இருந்து இவனை ஓரம்கட்டுவதற்கு அவனுடைய வாயால் அவனாகவே அனைத்தையும் கெடுத்துக்கொள்ளப்போகிறான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகவும் கடுமையானவன்.

    ReplyDelete
  2. கத்தி எடுத்தவனுக்கு சாவு கத்தியாலேயே

    ReplyDelete
  3. Haa ha ha ha... conj porungayya....neeenga ellorum athe makkalaal thookki veesappaduveergal....!

    ReplyDelete
  4. ஆட்சியிலுள்ள வன்போக்காளர்களும் மென்போக்காளர்களும் மெதுமெதுவாக இரு திசை செல்லும் வாய்ப்புகள் உண்டு. மஹிந்த பசில் ஆகியோரை வன்போக்காளர்கள் புறக்கணித்துச் செல்லும் போக்கு வெளிப்படையாகவே தென்படத்தொடங்கி விட்டது. அரசாங்கத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் இவர்கள் இருவரையும் முன்வைத்துச் செயற்படுவோர்களாக உள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.