Header Ads



கொரோனா தொடர்பான புள்ளி விபரங்கள் பொய்யானவை – உபுல் ரோஹன


கோவிட் நோய்த் தொற்று தொடர்பில் அதிகாரிகளினால் வெளியிடப்பட்டு வரும் புள்ளிவிபரத் தகவல்கள் பொய்யானவை என பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று நாடு முழுவதிலும் பரவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்று தொடர்பில் அடிமட்ட அளவில் தகவல் திரட்டப்படாது சில உயர் அதிகாரிகளின் தகவல்களை மட்டும் கருத்திற் கொள்வதனால் இந்த நிலைமை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் சில இலத்திரனியல் ஊடகங்களினால் வெளியிடப்பட்டு வரும் கோவிட் தொடர்பான புள்ளிவிபரத் தகவல்கள் குறித்து தமது சங்கத்தினருக்கு சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப நிலை தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசாங்கத்தின் அதிகாரிகள் தங்களது சங்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

மேல் மாகாணத்தில் காணப்பட்ட கோவிட் நிலைமை தற்பொழுது நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் பரவியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு கைத்தொழில் பேட்டைகள் மற்றும் தனியார் துறைத் தொழில்களில் ஈடுபடுவோருக்கும் கோவிட் தொற்று உதியாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்து சரியான தகவல்களை பெற்றுக் கொண்டு கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என தொற்று நோய் மற்றும் கோவிட் வைரஸ் தொற்றை தடுக்கும் அமைச்சின் செயலாளர் டொக்டர் அமால் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அப்ப உண்மையான புள்ளி விபரத்தை நீங்கள் வெளியிடலாமே.

    ReplyDelete

Powered by Blogger.