Header Ads



இலங்கையர்கள் பாஜகவின் கொள்கைகளை ஏற்பது குறித்து சிந்திக்கின்றார்கள்- இந்திய அமைச்சர் கருத்து


அமெரிக்கா இலங்கை உட்பட பல நாடுகள் பாஜகவின் கொள்கையால் கவரப்பட்டு அந்த கொள்கையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளன என திரிபுராவின் சட்ட அமைச்சர் ரட்டன் லால் நாத் தெரிவித்துள்ளார்.

திரிபுரா முதலமைச்சர் சமீபத்தில் தெரிவித்த பாஜக இலங்கையில் ஆட்சி அமைப்பது குறித்த சர்ச்சை கருத்தினை தெளிவுபடுத்தி கருத்து வெளியிடுகையிலேயே திரிபுராவின் சட்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகநாடுகள் பாஜகவின் கொள்கையால் கவரப்படும் என்பதையே எங்கள் முதலமைச்சர் தெரிவித்தார் ஆனால் அதன் அர்த்தம் பாஜக அரசாங்கத்தை அமைக்கும் என்பதில்லை முதலமைச்சரின் கருத்து தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு உலகமும் பாஜகவின் கொள்கைகளை சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள திரிபுராவின் சட்ட அமைச்சர்இலங்கையில் உள்ளவர்கள் பாஜகவின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்வது குறித்து சிந்திக்கின்றார்கள் அமெரிக்காவும் எங்கள் கொள்கையை ஏற்றுக்கொள்வது குறித்து சிந்திக்கின்றது முழு உலகமும் இது குறித்து சிந்திக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்

நாங்கள் கொரோனா வைரசினை தயாரித்தோம் ஏனைய நாடுகள் எங்களிடமிருந்து அதனை கொள்வனவு செய்கின்றன நரேந்திர மோடி தெரிவித்த பின்னர் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது முழு உலகமும் அவரது சிந்தனைகள் குறித்து சிந்திக்கின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Eruma kooothi....ungakitta apdi ennada kolha irukku pemaari naasamaaa ponavanigalaaa

    ReplyDelete
  2. Bjp என்பது கல்வியறிவற்ற, இந்திய முட்டால்களை கொண்ட மலம் உண்ணும் கூடாரம். மோடி என்பவன் சொந்த மனைவியை வைத்து வாழ வக்கற்ற கிழவன்

    ReplyDelete

Powered by Blogger.