Header Ads



ஜனாஸாவை அடக்க அனுமதி கிடைக்கும்வரை, எமது போராட்டங்கள் தொடரும் -இம்ரான் மஹ்ரூப் எம்.பி


ஜனாஸாவை அடக்க  அனுமதி கிடைக்கும் வரை எமது போராட்டங்கள் தொடரும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்  மஹ்ரூப் தெரிவித்தார்.

 ஜனாஸா கட்டாய தகனத்துக்கு எதிரான தேசிய இயக்கத்தால் இன்று (23)கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

நிபுணர் குழுவும் ஜனாஸாக்களை அடக்கமுடியும் என கூறிய பின்பும் அரசு அனுமதி தராதது கண்டனத்துக்குரியது. இதற்கான அனுமதி பெற பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த அரசு வேண்டுமென்றே இதற்கான அனுமதியை மறுக்கிறது.அதுவும் பிரதமர் பாராளுமன்றத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியும் என கூறிய பின்பும் பிரதமரின் கூற்றை கூட பொய்யாக்கும் அரசின் நிலைப்பாடு பிரதருக்கு மேலே அரசை இயக்கும் இனவாத சக்தி உள்ளது என்பதுக்கு சிறந்த உதாரணம்.

இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமரை முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திக்க கூடாது என்பதுக்கான சகல முயற்சிகளையும் அரசு மேற்கொள்கிறது.

அதன் ஒரு பகுதியாகவே அவரின் பாராளுமன்ற உரையும் ரத்துசெய்யப்பட்டது.அதன்பின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கி கேட்டு கூட்டாக  கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தோம். தற்போது பாதுகாப்பு காரணங்கள் என கூறி அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிய கிடைக்கிறது.

ஆகவே இந்த அரசு ஜனாசாவை அடக்க அனுமதி அளிக்கும் மனநிலையில் இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.ஆனால்  அனுமதி கிடைக்கும்வரை எமது போராட்டங்கள் தொடரும் என்றார்.

No comments

Powered by Blogger.