Header Ads



சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில், மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும்


இந்த முறை சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் இசைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுதந்திர நிகழ்வில் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றப்பட்ட பின்னரே தேசிய கீதம் இசைக்கப்படும்.

அத்துடன் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய சுதந்திர தின நிகழ்வு இடம்பெறும் 4 ஆம் திகதி அதிகாலை 4 முதல் பிற்பகல் 1 மணி வரை சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தினை செயற்படுத்தவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

3 comments:

  1. அர்த்தம் புரிந்தவர்கள் மட்டும் கொண்டாடுங்கள்.

    ReplyDelete
  2. i know the meaning for 'maatha'

    ReplyDelete
  3. First Independence in 1949 national antham was sung in both tamil and sinhala. So after independence they started right path for the country and now we are going in wrong way.

    ReplyDelete

Powered by Blogger.