Header Ads



நில அதிர்வு குறித்து ஆய்வு செய்த பிரதேசத்தில், மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை


நில அதிர்வுகள் சில பதிவான மடுல்சீமை எகிரிய பிரதேசம் புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியக அதிகாரிகளினால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த வாரத்தில் எகிரிய பிரதேசத்தில் இறுதியாக நிலஅதிர்வு ஏற்பட்ட நிலையில் அது ரிக்டர் அளவு கோலில் 1.5 ஆக அதிகரித்திருந்து. 

எவ்வாறாயினும் இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் எகிரிய பிரதேசத்தில் நிலஅதிர்வு பதிவாகியிருந்தது. 

இது தொடர்பில் அவதானம் செலுத்திய புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியக அதிகாரிகள் குறித்த பிரதேசத்திற்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர். 

குறித்த கள ஆய்வில் மேலும் சில தரப்பினர் கலந்து கொண்ட நிலையில் இதன்போது பிரதேச மக்கள் தெளிவூட்டப்பட்டுள்ளனர். 

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குறித்த பிரதேசத்தில் சுங்க பணிகள் இடம்பெற்று வருகின்றமை தெரிய வந்துள்ளதாக அந்த பணியகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் குறித்த பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர். 

இதன்காரணமாக சுங்க அகழ்வு மற்றும் மணல் அகழ்வின் போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பணியக அதிகாரிகள் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.