Header Ads



ஜனாஸா விவகாரத்தில் பிரதமரின் கூற்றை இராஜாங்க அமைச்சர் மாற்றியமை - இலங்கையும், பிரதமரும் நகைப்புக்குள்ளாகியது பாதிப்பாகும்


கொவிட் 19 இல் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரதமரின் கூற்றை மாற்றியமைப்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவரால் முடிந்தது, 20ஆவது திருத்தத்தின் எதிர்மறையான விளைவாகும் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொரொனா வைரஸினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்து, மறுநாள் அவரின் கூற்றுக்கு மாற்றமாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக கரு ஜயசூரிய பதிவிட்டுள்ள டுவிட்டர் அறிவிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது,

கொரோனா வைரஸ் நீரில் பரவுவதில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பாராளுமன்றத்தில் தெரிவித்ததை அடிப்படையாக்கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரினால், கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய ஏன் முடியாது என பிரதமரிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு பிரதமர் அடக்கம் செய்ய அனுமதி வழங்குவோம் என பதிலளித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக எதிர்க்கட்சியினால் சுகாதார இராஜாங்க அமைச்சரிடம் வினவப்பட்டபோது,

கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் தொழிநுட்பக் குழுவின் தீர்மானமே இறுதியானது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே பதிலளித்திருந்தார்.

பிரதமர் தெரிவித்திருந்த கருத்தை மாற்றி அமைப்பதற்கு இராஜாங்க அமைச்சருக்கு முடியுமாகியது, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் எதிர்மறையான விளைவாகும். இறுதியில் ஒட்டுமொத்த இலங்கையும் பிரதமரும் நகைப்புக்குள்ளாகியமை பாதிப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி - வீரகேசரி

2 comments:

  1. கருஜயசூரிய அவரகள் முதிர்ந்த அரசியல்ஞானி. ஆயினும் நஸீர் அகமட் ஹரீஸ் தௌபீக் மற்றும் முதுநபீன் அலிசப்ரி பைசல் காசிம் போன்றவரகளை இப்படிச் சாடக்கூடாது. பாவங்தானே.

    ReplyDelete
  2. It is obvious that power struggle had started within Rajapaksha family. Gota was nominated as Presidential candidate by SLPP because Namal was not old enough. Now 20A amendment allows Mahinda to contest again too. Definitely the next SLPP Presidential candidate would be either Mahinda or Naamal, unless Gota takes over the reins of SLPP. He already started testing the water through Wimal Weerawanse. When Wimal suggested that Mahinda should step down and Gota should be made SLPP chief, the words didn’t come from his mouth but from Gota. Now Mahinda cannot make any decisions on his own, ordinary MPs and Junior Ministers can overrule his decisions and make him look like a clown. Burial/cremation decision was just one example.

    ReplyDelete

Powered by Blogger.