Header Ads



புவியியற் துறையில் கலாநிதி பட்டம் பெற்ற, ஸித்தி ரபீக்கா அமீர்தீன்


இலங்கையின் தென் மாகாணத்தின் காலி மாநகரில் அமைந்துள்ள “கட்டுகொடை” எனும் சிறிய கிராமத்தில் 1964.08.04 இல் மொஹமட் சபீக் மற்றும் றெலினா உம்மா ஆகியோருக்கு மூத்த புதல்வியாக பிறந்த ஸித்தி ரபீக்கா அமிர்தீன் காலி/உஸ்வதுன் ஹஸனா மகளிர்  மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதரண தரம் வரை கல்வி கற்று பின், காலி/மல்ஹருஸல்ஹியா தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்தரத்தில் கலைப் பிரிவில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார். 

1984 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய இவர், 1991 இல் BA சிறப்புப் பட்டத்தினை புவியியல் துறையில் சிறப்புத் தேர்ச்சியுடன் பெற்றுக் கொண்டதோடு, 1991 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையளராக கடமையாற்றியதுடன், 2003 இல் அதே பல்கலைக்கழகத்தில் MA  முதுகலைமாணிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றியதுடன் 1996 இல்; இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனம் பெற்று இதுவரை சிரேஷ்ட விரிவுரையாளராக (தரம்-I) கடமையாற்றி வருகிறார். 

2019 இல் தனது கலாநிதிப் பட்டத்தினை யாழ்பாணப் பல்கலைக்கழத்தில் புவியியற் துறையில் முடித்துக்கொண்ட இவர், இம்மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெற்று முடிந்த யாழ் பல்கலையின் 35வது பொதுப் பட்டமளிப்பு விழாவில் கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பெண்கள் பல்கலைக்கழக கல்வியோடு கற்றல் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து உயர் கல்வியை கற்பதன் மூலம் தான் சிறந்ததொரு சமுதாயத்தை உறுவாக்க முடியும் என பெண்களுக்கு அழைப்புவிடுக்கும் இந்த சாதனைப்பெண்ணான கலாநி ஸித்தி ரபீக்கா அமீர்தீனை நாமும் வாழ்த்துகிறோம்.

-கபூர் நிப்றாஸ்-


6 comments:

  1. Alhamdu Lillah....Ellam Pugalum Iraivenukka. Katugoda, (Manvasanai) Galle has produced another shining star long before....

    ReplyDelete
  2. கலாநிதி சித்தி ரபீக்கா அமீர்தீன் அவர்களுக்கு எமது இதயங் கனிந்த வாழ்த்துக்கள்.மிக நீண்ட காலத்துக்குப்பிறகு முஸ்லிம் பெண்களும் கல்வியில் சளைத்தவர்களல்ல என்ற உண்மையை நீங்கள் நிரூபித்துக்காட்டியுள்ளீர்கள். உங்கள் கல்வியால் உங்கள் சமூகத்துக்கும் இந்த நாட்டுக்கும் உரிய பங்களிப்பை வழங்க அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றோம். உங்களைப் போன்ற இன்னும் பல முஸ்லிம பெண் கலாநிதிகள் உருவாக வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. She deserves it..she is an example for entire Muslim community..she is an example for all Muslim women in Sri Lanka and beyond.
    She has been a good senior lecturer and a hard working academic .
    With all difficulties she managed to complete her PhD. We hope to see as one of professors among Muslim women.

    ReplyDelete
  5. Congratulation Professor...

    ReplyDelete

Powered by Blogger.