Header Ads



ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை, தேசிய பாதுகாப்பு செயற்குழுவின் அறிக்கையை ஆய்வுசெய்ய குழு நியமனம்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கை  ஆகியவற்றின் காண்புகள் மற்றும் பரிந்துரைகள் தொர்பாக விரிவாக ஆராய்ந்து அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கையிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  குழுவொன்றை நியமித்துள்ளார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரனதுங்க, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும், தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கையும் ஜனாதிபதி அலுவலகத்தினால் குழுவிடம் வழங்கப்படும்..

குழுவின் பணிகளுக்கு வசதிகளை வழங்குதல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நெறிப்படுத்த ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் (சட்டம்)  ஹரிகுப்தா ரோஹனதீர குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் அறிக்கை 2021 மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.02.19

1 comment:

Powered by Blogger.