Header Ads



முஸ்லீம்களின் மத உரிமைகளை மீறாதீர்கள், தகனம் செய்யும் பாரபட்சத்தை கைவிடுங்கள் - இலங்கை அமைச்சருக்கு கடிதம்


- TL -

கட்டாய தகனம்; நியாயமற்றது அவசியமற்றது முஸ்லீம்களின் மத உரிமைகளை மீறுவது, மன்னிப்புச்சபை இலங்கை அமைச்சருக்கு கடிதம்

இலங்கையின் கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை நியாயமற்றது அவசியமற்றது முஸ்லீம்களின் மத உரிமைகளை மீறுவது என சர்வதே மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அமைச்சர் சன்ன ஜெயசுமனவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட்கிரிவ்த்ஸ் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இஸ்லாமிய கொள்கைகளின் படி உடல்களை அடக்கம் செய்வது ஒருவரின் இறுதிநிகழ்வில் முக்கியமான விடயம்,உடல்கனை தகனம் செய்வது இஸ்லாமிய மதத்தில் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது,இதன் காரணமாக கட்டாய தகனம்; நியாயமற்றது அவசியமற்றது முஸ்லீம்களின் மத உரிமைகளை மீறுவது

அரசாங்கத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர இறந்தவர்களின் உடல்கள் காரணமாக நிலத்தடி நீர் மாசுபடும் என தெரிவித்துள்ளார் எனினும இது உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களிற்கு முரணானது உலக சுகாதார ஸ்தாபனம் உடல்களை அடக்கம் செய்யலாம் தகனம் செய்யலாம் என தெளிவாக தெரிவித்துள்ளது.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கொவிட் 19க்கு காரணமான வைரஸ் நீரின் மூலம் பரவாது என தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் போன்ற பொதுசுகாதார நிபுணர்களால் வெளியிடப்பட்ட சர்வதேச வழிகாட்டுதல்களிலும்,சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளிலும்( ஜெனீபர்பெரேரா தலைமையிலானது –உடல்களை அடக்கம் செய்யலாம் என தெரிவித்திருந்தது) தங்கியிருக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்.

அரசாங்கத்தை தனிமைப்படுத்தல் சட்டத்திலும் நோய் தடுப்பு கட்டளையிலும் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும்உடல்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் அனுமதிக்குமாறும் கொரோனாவைரசினால் இறந்தவர்கள் இறந்தவர்களாக கருதப்படுபவர்களை தகனம்; செய்யும் பாரபட்ச கொள்கையை கைவிடுமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

1 comment:

  1. Yes it's our fundamental rights. Nowadays our governments afraid to someone extremists. Allah seen as each once activities.

    ReplyDelete

Powered by Blogger.