Header Ads



பாடசாலை அதிபர், மாணவர்களைத் தண்டிப்பது போல மனித உரிமை ஆணையாளர் செயற்பட முடியாது, அவர் தனது ஆணையை மீறிவிட்டார் - பாலித


பாடசாலை அதிபர் மாணவர்களைத் தண்டிப்பது போல மனித உரிமை ஆணையாளர் செயற்பட முடியாது எனத் தெரிவித்துள்ள சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன, மனித உரிமை ஆணையாளர் தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறி செயற்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

சண்டே ஒப்சேவரிற்கான பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

கேள்வி- இலங்கை தொடர்பான முகன்மைக் குழு இலங்கையை இன்னொரு தீர்மானத்திற்கு அனுசரணை வழங்குமாறு இலங்கையை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன..?

பதில் -அது உள்ளடக்கத்தை பொறுத்த விடயம். பெரும்பான்மையான மக்களினது விருப்பத்திற்கு மாறான அரசமைப்பிற்கு முரணான தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கும் என முகன்மை குழு எதிர்பார்க்க முடியாது.

கடந்த தேர்தலின் போது மக்கள் தாங்கள் எதற்காக வாக்களிக்கின்றனர் என்பது குறித்து நன்கு அறிந்திருந்தனர்.

மனித உரிமை ஆணைக்குழு அனைத்து நாடுகளுக்கும் உதவுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. முகன்மை குழுக்கள் உட்பட அனைத்து நாடுகளும் தங்கள் மனித உரிமை நிலவரத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை.மீறல்கள் என தெரிவிக்கப்படுபவற்றிற்காக நாடு ஒன்றின் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக மனித உரிமை ஆணைக்குழு உருவாக்கப்படவில்லை.

மனித உரிமைகள் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி –உள்ளாந்தவை என்பதால் நாங்கள் வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் இல்லாமல் அதற்கு தீர்வைக் காண்போம்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை போன்றவற்றை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழுத்தங்களைக் கொடுப்பது மனித உரிமை ஆணைக்குழுவின் இலக்குகளை அடைவதற்கும் முகன்மை நாடுகளுடனான இரு தரப்பு உறவுகளுக்கும் உதவப்போவதில்லை.

2015ம் ஆண்டு அன்று ஆட்சியிலிருந்த அரசாங்கம் அல்லது ஆட்சியுடன் தொடர்புபட்ட ஒருவர் எங்கள் நலனிற்கு முரணான தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கினார் என்பதையும் நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

2

இலங்கையில் நீதிமற்றும் இழப்பீடுகளிற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் மாற்றுசர்வதேச வழிமுறைகளை முன்வைத்துள்ளார்,அவரது இந்த வேண்டுகோளை நியாயப்படுத்த முடியும் என கருதுகின்றீர்களா?

பதில்- அவரது வேண்டுகோளை எந்த தருணத்திலும் நியாயப்படுத்த முடியும் என நான் கருதவில்லை, இலங்கை விவகாரத்திலும் ஏனைய நாடுகளின் விவகாரத்திலும்.

மனித உரிமை பேரவை நாடுகளை தண்டிப்பதற்காக ஏற்படுத்தவில்லை நாடுகளிற்கு மனித உரிமை விவகாரத்தில் உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டது.

பாடசாலை அதிபரை போல கையில்ரூலருடன் மாணவர்களை அடிப்பது ஐக்கியநாடுகள் மனிதரின் கடமையில்லை என நான் கருதுகின்றேன்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கான ஆணை உருவாக்கப்பட்டபோது அவ்வாறான நோக்கம் காணப்படவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நாடுகளை தண்டிக்கின்ற பொறுப்பை எடுத்துள்ளது.

அனைத்து நாடுகளிற்கும் பொதுவான விதத்தில் இந்த தராதரம் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து சந்தேகங்கள் உள்ளன.

இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் உள்ளுணர்வுகள் பரிந்துரைகள் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை, இதுவரை நிரூபிக்கப்படாதவை.

3

கேள்வி- இலங்கையில் உருவாகிவரும் போக்குகுறித்து மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கையில் மோசமடையும் மனித உரிமை நிலவரத்திற்கான ஆரம்ப எச்சரிக்கைகள் என அவர் தெரிவித்துள்ளார்?

பதில்- மனித உரிமை ஆணையாளர் அவ்வாறான கருத்தினை வெளியிட்டிருக்க கூடாது.

அவ்வாறான முடிவை நியாயப்படுத்துவதற்கான போதிய ஆதாரங்கள் அவரிடம் உள்ளதாக நான் கருதவில்லை.

இலங்கையை பொறுத்தவரை அவரது குற்றச்சாட்டு உண்மையென்றால் ஏனைய பல நாடுகளிற்கு எதிராகவும் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கமுடியும்.

கேள்வி- மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு எதிராக சர்வதேச நியாயாதிக்கத்தினை பயன்படுத்துமாறும் பயண தடைகள் சொத்துக்களை முடக்கல் போன்றவற்றை முன்னெக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளாரே?

பதில்- அவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மீறி செயற்பட்டுள்ளார் என நான் மீண்டும் தெரிவிக்கின்றேன். மனித உரிமை பேரவையுடன் இணைந்து செயற்பட முயலும் நாட்டை தேர்ந்தெடுத்து இலக்குவைக்கும் நடவடிக்கை இது.


No comments

Powered by Blogger.