February 27, 2021

பலர் சிரித்தார்கள், எதிர்ப்புக்கள் எழுந்தன, அனைத்தையும் பொறுமையாக எதிர்க் கொண்டோம் - பிரதமர்


சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய விவசாய ஏற்றுமதி வலயம் ஸ்தாபிக்கும் தேசிய செயற்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (2021.02.27) கஸபகல ரஜமஹா விகாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் விவசாய கிராமம் அல்லது வலயம்  நிறுவும் திட்டத்துக்கு அமைய ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் விவசாய கிராமம்,வலயம் ஆரம்பித்து வைக்கும் வகையில் பிரதமர் மாங்கன்று ஒன்றினை நாட்டிவைத்தார். நிகழ்வில் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு அமைச்சரவை சத்தியபிரமாணம் செய்துக் கொண்டது எனக்கு நினைவில் உள்ளது. அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் அமைச்சுக்கான விதானங்களை குறிப்பிடும் போது பலர் சிரித்தார்கள். தயாசிறி ஜயசேகரவை பத்திக் அமைச்சர் என்றும், பிரசன்ன ரணவீரவை மெடி அமைச்சர் என்றும் குறிப்பிட்டார்கள். ஒரு சில அமைச்சர்கள் இப்பெயர்களை கண்டு அமைச்சு பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள கூட சற்று தயங்கினார்கள். நாங்கள் இந்த அமைச்சுக்களை சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட தேசிய உற்பத்திகளை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி  அபிவிருத்தி இராஜாங்க அமைச்சாக அடையாளப்படுத்தினோம். சிறு ஏற்றுமதி பயிர்செய்கைகளின் பெறுமதியை உணர்ந்தே அதற்கு தனித்துவமான அமைச்சினை ஒத்துக்கினோம்.

நாட்டில் தேசிய உற்பத்திகளை முன்னெடுக்காவிட்டால் தொழில்வாய்ப்புக்கள் தோற்றம் பெறாது. தொழில் வாய்ப்புக்களை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்திற்கு என்னவாயிற்று, அந்திய செலாவணி ஊடாகவே வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்பணம் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறுகிறது. மஞ்சள்தூள் இறக்குமதிக்காக ஒரு வருடத்திற்கு மாத்திரம் 1000ஆயிரம் மில்லியனை செலவழித்துள்ளோம். ஒரு வருடத்திற்கு மஞ்சள் தூள் இறக்குமதி செய்யமால் தேசிய மட்டத்தில் பயிர்ச்செய்கையை ஊக்கப்படுத்த அனுமதி வழங்கினோம். மஞ்சள் தூள் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் மஞ்சள் தூள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று பல எதிர்ப்புக்கள் எழுந்தன. அனைத்தையும் பொறுமையாக எதிர்க் கொண்டோம். தற்போது மஞ்சள் உற்பத்தியில் எதிர்பார்க்கப்பட்டளவு முன்னேற்றம் காணப்படுகிறது. மஞ்சள் இறக்குமதி தடை செய்ததால் 1000 மில்லியன் நிதி சேமிக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் வாசனை திரவியங்களுக்கு மேலதிகமாக புதிதாக ஏற்றுமதி உற்பத்திகளை அறிமுகம் செய்துள்ளோம். டிஐ.சி மாம்பழம், எமது நாட்டு உற்பத்தியாகும். உலர் வலய பிரதேசத்தில் பயிர்செய்யும் வகையில் இந்த மா இனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

இதுவே எமது மாற்றம் நீங்கள் நாட்டும் மா, மரமுந்திரிகை,சோளம் ஆகியவை நாட்டின் இறையான்மையை பாதுகாப்பதற்கான முயற்சியாகும். அனைத்து கன்றுகளும் நாட்டின் சுதந்திரத்தின் அடையாளம். புதிய சிந்தனையுடனான இந்த முயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

பிரதான பெருந்தோட்ட பயிர்ச்செய்கை ஊடாகவும், விவசாய ஏற்றுமதி உற்பத்தி ஊடாகவும் அதிக நிதி கிடைக்கப் பெறுகின்றன. அம்பாந்தோட்டை மாத்திரமல்ல நாடு தழுவிய மட்டத்தில் விவசாய ஏற்றுமதி வலயம் அமைக்கப்படும். கிராமிய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது எமது பிரதான இலக்காகும். உங்கள் அனைவருக்கும் கடவுள் துணை,என பிரதமர் குறிப்பிட்டார்.

1 கருத்துரைகள்:

You have Grand Plans to improve Agriculture by introducing new crops. But the existing Farmers have enough and more problems in cultivating their lands due to lack of Water, Pests with New Ones cropping up, lack of Fertiliser, Wild Animals and most importantly Financial facilities. Have you made any efforts to solve these Problems of the existing Farmers?

But, you come up with new Projects which will benefit ONLY the 'Perethayas' on your side who are waiting to fill their pockets and, in the Process, will Destroy Forest Land, Animal Life, Environment and Nature.

How long can you continue to Fool the people?

Post a comment