Header Ads



கட்சி ஸ்தாபிப்புக்கு பங்களித்தவர்களிடம், பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்


- கபூர் நிப்றாஸ் - 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை விஷ்தரிப்பு செய்வதற்காக அண்மையில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்த குழுவின் செயற்பாடுகளில் கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

சிறுபான்மை கட்சிகளின் அண்மைக்கால செயற்பாடுகளால் வெறுப்படைந்த முஸ்லிம் ,தமிழ் மக்கள் எதிர்க்கட்சியோ ஆழும் கட்சியோ தேசிய கட்சி ஒன்றோடு பயணிப்பதே இக்காலத்துக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவு எடுத்துள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் ஆலோசனையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மற்றும் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர்  அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களுக்கு விஜயம் செய்திருந்தனர்.

கடந்த காலங்களில் தேசிய கட்சிகளைக்காட்டி தங்களது கட்சிகளை வளர்த்துவிட்டு சலுகைகளுக்காக பலர் விலை போன நிலையில் தற்போதும் ஐக்கிய மக்கள் சக்தியின் பெயரைப்பயன்படுத்தி நல்லாட்சிக்கான தேசிய முன்னனி எனும் கட்சியை வளர்க்க அதன் தலைவர் காத்தான்குடி ரஹுமான் (NFGG) முயற்சிப்பதாகவும் அதற்கு முஜீபுர் ரஹ்மான் எம்.பி ஒத்துழைப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் இந்த செயற்பட்டால் கிழக்கில் கட்சி அபிவிருத்தி என்பது கேள்விக்குறி ஆவதுடன், பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் பலன் இல்லாமல் போகக்கூடிய சூழல் நிலவுவதாகவும் கட்சியின் தலைவருக்கு ஆதரவாளர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

வாரம் ஒருமுறை கட்சி மாறும் சுயநலவாதிகளை விடுத்து கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக செயற்படுபவர்களாலேயே கட்சியை வளர்க்க முடியும் எவும்,மேலும், ஐக்கிய மக்கள் சக்தியைப் பயன்படுத்தி தங்களையும் தங்களது கட்சிகளையும் வளர்க்க முயற்சி செய்யாமல் நேரடியாக கட்சியோடு இணைந்து அங்கத்துவத்தைப்பெற்று கட்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைக்குமாறும் தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி எனும் கட்சி சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்டு தனது முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப்பெற்றதுடன் இன்றுவரை ஆதரவுத்தளம் அதிகரித்து வருவதும் அரசாங்கத்துக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்கள் பலரும் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது ஆரவுகளை வழங்கி வருவதும் எதிர்வரும் காலங்களில் இலங்கை நாட்டை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி செய்யும் என்பதை உணர்த்துகிறது.

இதனை உணர்ந்த பலரும் போட்டி போட்டுக்கொண்டு கட்சியின் முக்கிய பொறுப்புக்களைக் கோரி நின்றாலும் கட்சியின் தலைவர் தனது ஆதரவாளர்களினதும் உண்மை தொண்டர்களினதும் கருத்துக்களைப்பெற்றுத்தான் குறித்த பதவிகளை வழங்க வேண்டும் எனவும் தலைவருக்கு தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.