Header Ads



மைத்திரிபாலவை வேட்டையாடவும், சுதந்திர கட்சியை அழிப்பதற்கும் சதி - முன்னாள் செயலாளர்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், அதன் தலைவர்களையும் அழிக்கும் சதித்திட்டம் நடைபெற்று வருவதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மூலம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதி எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து லக்ஷ்மன் பியதாச இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி எதிராக குற்றம் சுமத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது.

இந்த பயங்கரவாதிகளுக்கு ஊதியம் வழங்கிய கதைகள் வரலாற்றில் உள்ளன. இவை குறித்து விசாரணை நடத்தி எதனையும் முன்வைக்கவில்லை.

இதற்கு பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், அதன் தலைவரையும் இலக்கு வைத்து பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது வேண்டும் என்றே செய்யப்பட்டதாகவே நாங்கள் காண்கின்றோம்.

இந்த நிலையில், எமது கட்சியின் தலைவரை வேட்டையாடுவதற்கு எதிராகவும் கட்சியை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்களுக்கு எதிராகவும் நாட்டின் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் அனைத்து சக்திகளையும் எங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.