Header Ads



முஸ்லிம்களிடம் சாணக்கியனுக்கு அமோக ஆதரவு, நெகிழ்சியடைந்ததாக தெரிவிப்பு ,செல்பி அடிக்க முண்டியடிப்பு (வீடியோ)


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி மன்னார் நகருக்கு இன்று -06 சென்றடைந்தது. இதன்போது முஸ்லிம்களிடத்தில் சாணக்கியனுக்கு அமோக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. செல்பி அடிக்க முண்டியடிப்பு நடந்தது. இது தமக்கு நெகிழ்ச்சியான செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=xT1Ve-GzUHY&feature=emb_logo

3 comments:

  1. Go ahead my respectable sankkiyan sir.in the name of almighty Allah i wish your all successful.

    ReplyDelete
  2. எந்த முஸ்லிம் தனிப்பட்டவரகளும் முஸ்லிம்களின் தலைமைகள் எனத் தம்மைத்தாமே விழித்துக் கொண்டு திரியும் அரசியல் கோவேறு கழுதைகளும சாணக்கியன் தம்பி அவரகளிடம் சென்று முஸ்லிம்களுக்காகப் பேசுங்கள் என்று இதுவரை கேட்கவில்லை. ஒருஜனநாயக நாட்டில் வாழும் அல்லது எங்களுடைய மொழியில் அரசியல் செய்யும் ஒருவரிடம் இருக்கக்கூடிய மிக முக்கிய பொறுப்பு என்னவென்றால் எங்கெங்கெல்லாம் ஜனநாயக விழுமியங்கள் மீறபபடுகின்றனவோ அங்கெல்லாம் அவர் அழையாமல் சென்று ஜனநாயகத்தின் மாண்பினைக் காக்க முன்நிற்பார். இதனைத்தான் சாணக்கியன் தம்பி அவரகளும் செய்கின்றார்கள். நாம் அறிந்தவரை சுமந்திரன் சேர் அவரகளும் செய்'கின்றார்கள். இன்று தமிழ்ப்பேசும் இந்து கிறிஸ்தவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முப்பது பேர்களுககு மேல் பாராளுமன்றில் இருக்கின்றனர் அவரகளுல் சாணக்கியன் தம்பி போன்ற ஒரு சிலர் முஸ்லிம்களுக்காக உரத்துக் குரல் கொடுப்பது முஸ்லிம்களின் இதயத்தில் ஈரக்கசிவினை ஏற்படுத்தி நிற்கின்றது. இதனால் தமிழர்களின் பக்கத்தில் எதுவித குறைவும் ஏற்படப்போவதில்லை. நிறை குடம் எப்போதும் தளம்புவதில்லை. தமிழ்த் தலைமைகள் இதுவரையும் பட்டம் பதவிகளுக்காக சோரம்போனது கிடையாது. வியாழேந்திரன் போன்ற தமிழர்கள் பிறந்த மட்டு மண்ணில்த்தான் சாணக்கியன் தம்பி போன்ற வீர மறவரகளும் பிறந்து வளர்ந்து மடியப் போகின்றார்கள். இம் மண்ணில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களாகிய (முஸ்லிம்களாகிய) நாங்களும் அவரகளுடன் சேர்ந்து இங்கேதான் வாழ்ந்து மடியப் போகின்றோம். கிழக்கு மாகாணத்தில் வாழும் 99மூ மான முஸ்லிம் மக்கள் அரசியல் அறிவு அற்றவரகள் என்பது பல முறை நிருபிக்கப்பட்டுள்ள விடயம். இதனைச் சில முஸ்லிம்கள் பயன்படுத்தி தமது வசதிக்கேற்றவிதமாக அவற்றை விற்று தமது குடும்பத்தினை நடாத்திக் கொண்டு செல்கின்றனர். .இந்து கிறிஸ்தவத் தலைவரகளிடமும் இத்தன்மைகள் இருக்கலாம் ஆனால் விகிதாசாரத்தில் மிக மிகக் குறைவாகும். அவ்வாறு தோன்றுபவரகளை தமிழ்ச் சமூகம் மன்னிப்பது கிடையாது என்பது வரலாறு கூறும் உண்மை. தமிழர்களின் அரசியல் வரலாற்று நெறிமுறைகளை முஸ்லிம்களும் தம் கைகளில் எடுக்க வேண்டும். கண்ணியமான முறையில் அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகளின் வழிமுறைகளைப் பின்பற்றி அல்லது அவரகளுடன் சேர்ந்து இயங்குதல் வேண்டும். ஒழிந்திருந்து குழி பறிக்கும் உடன்பிறந்தாரைவிட எங்களை அரவணைத்துச் செல்ல தம் கரங்களை நீட்டும் பக்கத்து வீட்டுக்காரர் ஆயிரம் மடங்கு மேல்.

    ReplyDelete
  3. சோடா போத்தல்கள் போன்று சோனிகள் என்பது புதுமொழி. தொப்பி புரட்டிகள் என்பது பழையமொழி.

    ReplyDelete

Powered by Blogger.