Header Ads



வைரசின் கனதியை மக்கள் இன்னும் உணரவில்லை - எச்சரிக்கையாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டும்


(சி.எல்.சிசில்)

குறைந்தபட்சம் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்படும் வரை அல்லது சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் வேறு விதமாக பரிந்துரைக்கப்படும் வரை கொழும்பு முழுவதும் சீரற்ற கொவிட்-19 சோதனைகள் தொடரும் என்று கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க கூறினார்.

தற்போது தினமும் 1,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர் மற்றும் துரித அன்டிஜென் சோதனைகள் கொழும்பில் நடத்தப்பட்டு வருவதாகவும் இவர்களிடமிருந்து குறைந்தது 50 முதல் 60 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதாகவும்  ஆங்கில இதழ் ஒன்றுக்கு சேனநாயக்க தெரிவித்தார்.

இப்போது நூற்றுக்கணக்கிலிருந்து எண்ணிக்கை குறைந்து விட்டாலும், கொவிட்-19 இன் அச்சுறுத்தல் இருப்பதாகவும், கொழும்பில் வசிப்பவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“எண்கள் இப்போது நிலையானவை, அதை எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது. தற்போது பாதிக்கப்படக் கூடியது என்று நாங்கள் உணரும் பகுதிகளில், இலக்கு வைத்து சீரற்ற சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று சேனநாயக்க கூறினார்.

“இது இப்போது புதிய வழமையானது என்பதால் சோதனைகளை நிறுத்த நாங்கள் ஒரு கால அளவை அமைக்கவில்லை. இந்தச் சோதனைகள் கொவிட்-19 தொற்றாளர்களைஅடையாளம் காணவும் நாங்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட வேண்டியவர்களை இனங்காணவும் உதவும்” என்று சேனநாயக்க மேலும் கூறினார்.

வைரஸால் பாதிக்கப்படுவதன் கனதியை மக்கள் இன்னும் உணரவில்லை என்றும் மக்கள் எச்சரிக்கையாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.