Header Ads



பலவந்த ஜனாசா எரிப்பு குறித்து எதுவும் இல்லை - இலங்கை பற்றிய ஜெனீவா, பிரேரணை கசிந்தது


இந்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள மனித உரிமைகள் பேரவையின் 46 வது மாநாட்டில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின் வரைவு வெளியாகியுள்ளது

பிரித்தானியா தலைமையிலான மைய நாடுகள் இணைந்து இந்த பிரேரணையை முன்வைக்க உள்ளன.

இதில் போர் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை திரட்டுதல் ஆய்வு செய்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி எதிர்கால விசாரணைக்கான முதற்கட்ட நடவடிக்கையாக அவற்றை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை மீதான தோல்வி குறித்து சுட்டிக்காட்டி உள்ளதுடன் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமைகள் நிலைமையை கண்காணித்து அறிக்கை படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மனித உரிமைகள் தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சுயாதீனமற்றது எனவும் அந்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



1 comment:

  1. முஸ்லிம் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் அவர்களது தமிழ் சிங்கள நண்பர்களும் தாமதமாகவெனும் ஜனாசா எரிப்பு பிரச்சினையை ஐநா அமரிக்கா மட்டத்துக்கு எடுத்து செல்வதில் வெற்றிபெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து சர்வதேச ரீதியான கண்டனங்களும் அழுத்தங்களும் ஆரம்பித்துள்ளன. ஆனாலும் ஜனாசா எரிப்பு தொடர்பான.மனித உரிமை மீறல்கள் வேறு விடயம் 2009 இறுதிப்போரில் இடம்பெற்ற போர்குற்றங்கள் பற்றிய விவாதம் விசாரணை வேறு விடயம்.

    ReplyDelete

Powered by Blogger.