February 15, 2021

ஜனாசா அடக்க அனுமதியில் பிரதமரைவிட அதிகாரம்கொண்ட, குழுக்கள் எது என்பதில் எங்களுக்குப் பிரச்சிணையுன்டு


இன்று (15) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்த கருத்துக்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாண்டை தமது கட்சி வலயமைப்பை பலப்படுத்தும் ஆண்டாக பிரகடனப்படுத்தி பல் வேறு செயற் திட்மங்களை முன்னெடுக்கிறது. 107 தொகுதி அமைப்பாளர்களை நியமித்துள்ளது.மாவட்ட அமைப்பாளர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மிதமுள்ள 35 தொகுதிகளுக்குமான அமைப்பாளர்கள் நியமனம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும்.நியமிக்கப்பட்டுள்ள சகல அமைப்பாளர்களும் தமது தொகுதியில் தொகுதி காரியாலயம் ஒன்றை ஸ்தாபித்து வாரந்தாம் பொது மக்கள் தினங்களை நடத்த வேண்டப்பட்டுள்ளனர்.இதற்காக நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கட்சி அங்கத்தவர் இணைப்பும் வேகமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கட்சியின் ஏனைய துனை அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள் ளடங்களாக உள்ளார்ந்த வியூகக் கட்டமைப்பு பலப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.கட்சியின் கொள்கை வகுப்புச் செயற்பாடு பிரிதொரு வகையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.இதன் பிரகாரமே கட்சியின் எதிர் கால கொள்கை அமையும்.

மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படும் தினமு செயற்திட்டத்தின் ஒர் அங்கம்

 கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம் பெற்றது. அதனுடன் இணைந்ததாக சத்காரய எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவைகள் 4 ஹம்பந்தோட்டை மாவட்டத்தில் இடம் பெற்றது. கட்சியின் வலயமைப்பைப் பலப்படுத்த இந் ஆண்டை திட்டமிட்டுள்ளோம்.இதனோடு இனைந்தாக நாட்டிலுள்ள எதிர்க் ஏனைய கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களை இணைத்துச் செயற்படும் நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளோம்.

ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர்களிடையே இடம் பெற்ற சந்திப்பு குறித்த உன்மையில்லாத பல விடயங்களை கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பார்த்தேன்.இது முற்றிலும் பிழையான கருத்து. உன்மையில் இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம் பெற்றது.அங்கு பேசப்பட்ட விடயம் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழு விவகாரம் குறித்தது மாத்திரம் தான்.வேறு அரசியல் காரணிகள் குறித்துப் பேசவே இல்லை.அவர் எதிர்க் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்குள்ள பெறுப்பு சார்ந்த விடயத்தின் பாலே இவ்வாறு சந்தித்தார்.அரசியல் பழிவாங்கள்களை அடிப்படையாகக் கொண்டு பிராஜா உரிமையை இல்லாமல் ஆக்கும் செயற்பாடு ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எதிர்க் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் தெடரில் தான் ரணில் விகரமசாங்கவை சந்தித்தார்.அங்கு வேறு அரசியல் காரணிகள் கலந்துரையாடப்படவில்லை.

இன்று அரசாங்கத்தின் உள்ளே உள்ளக பல பிரச்சிணைகள் ஆரம்பித்துள்ளது.அது வெளிப்படையானது.

அன்மையில் விடயம் குறித்து பிரதமர் ஒர் முடிவை வெளியிட்டு சில மணித்தியாலங்களில் ஜனாதிபதி செயலகம் இதை மறுத்து அறிக்கை வெளியிட்டது.அதே போல்  கோவிட் மரண புதைப்பிற்கும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பின் வரிசை அங்கத்தவர்கள் வெளிப்படையாக மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டனர்.பிரதமரை விடவும் இந்த அரசாங்கத்தில் அதிகாரம் கொண்ட நபர்கள் குழுக்கல் எது என்பதில் எங்களுக்குப் பிரச்சிணையுன்டு.

விமல் வீரவன்சவின் நாடகத்தை முன்னிலைப்டுத்தி நாட்டின் உன்மையான பிரச்சுணைகளை மூடி மறைக்கின்றனர்.நாட்டில் இன்று பாரிய பிரச்சிணை கடன் சுமையாகும்.

இன்று பாரிய காடழிப்புடன் சுற்றாடல் பாதிப்பு இடம் பெற்று வருகிறது.

மக்கள் சேவைக்கு என்று பெருன்பான்மை கேட்டனர்.கடந்த வருடம் மக்கள் ஆணையை வழங்கினார்கள்.பின்னர் சரியாக செய்ய மூன்றில

இரண்டு பெருன்பானமை வேண்டும் என்று அதையும் கொடுத்தனர்.பின்னர் இல்லை 20 ஆவது திருத்தம் வேண்டும் என்றனர்.அதையும் கொடுத்தனர்.மக்களுக்கு இதனால் என்ன நடந்து? இன்று 

மீண்டும் சரியாக ஆட்சியை செய்ய பெஹோட்டுவ்விற்கு பெரிய இடம் வேண்டும் என்று புதிதாக ஆரம்பித்துள்னர்.சேரும் பொய்ல் அரசாங்கமும் பொய்ல்.ஆட்சியை நடத்த முடியாததன் விளைவுகளின் வெளிப்பாடுகள் தான் இது என்று தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment