Header Ads



வீடியோவை வெளியிட்ட மனித உரிமை அலுவலகம் - இலங்கை கடும் எதிர்ப்பு


ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் டுவிட்டரில் இலங்கை குறித்து வெளியிட்ட பதிவில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற காட்சிகளின் வீடியோவையும் இணைத்து பதிவு செய்தமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை கடந்தகால மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காணதவறியதன் காரணமாகமனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறும் ஆபத்துஅதிகரித்துள்ளது என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் டுவிட்டர் செய்தியொன்றில் தெரிவித்துள்ளதுடன் யுத்தகாலத்தில் எடுக்கப்பட்ட வீடியொன்றையும் பதிவுசெய்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இந்த நடவடிக்கைக்கு டுவிட்டர் மூலம் கடும் ஆட்சேபணையை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட்டர் பதிவு இதுதொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையிலிருந்து முற்றிலும் விலகிச்செல்லும் ஒரு நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள தினேஸ் குணவர்த்தன இது முற்றிலும் பக்கச்சார்பானது எனவும் தெரிவித்துள்ளார்.


 

1 comment:

  1. இருக்கு என்போர் அவர்களுடைய ஆவணங்களை முன் வைத்தால் இல்லை என்போர் அதற்குரிய ஆவணங்களை முன் வைத்தால் போச்சு. அதற்கென்ன கடும் எதிர்ப்பு வெளியிடுவது. குற்றமுள்ள மனசு குறுகுறுக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.