Header Ads



கிழக்கு முதலமைச்சர், வேட்பாளராக சாணக்கியன்...?


- Tw -

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்னிறுத்தப்படக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் இன்றைய தினம் -27- இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போது இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சாணக்கியனை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார்.

சிறீதரன் முன்வைத்த கோரிக்கையை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பலர் பேச்சளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

5 comments:

  1. வாக்குகளை சிதறவிடாமல் சிறுபான்மை சமூகமாய் ஓரணியில் திரண்டு எமது பலத்தை காட்ட வேண்டும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். துரதிஸ்டம் எமக்கு வாக்களிக்கமுடியாது என்பது.

    ReplyDelete
  3. Iwar ponravarhalin kural wendum parliament...pls athay kedukka ninaikka wendaaam....
    Mr.hon sanakkiyan u can any were for win bt.... parliament very important...pls think wel...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் . தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் சுழற்ச்சி முறையில் பதவி வகிக்கவேண்டும் என நான் நெடுங்காலமாக வலியுறுத்திவருகிறேன். தேர்தலுக்குத் தேர்தல் பதவி சுழற்ச்சி அமையும் வகையில் தமிழ் முஸ்லிம் கட்ச்சிகள் உடன்பாட்டுக்கு வரும் ஏற்பாடு ஒன்று உருவாக சாணாக்கியன் உழைக்க வேண்டும்.

    ReplyDelete
  5. யெல்லாம் சரிதான் ஆனால் சொல்வது போல் செய்வthil தானே பிரச்சனை இது வரலாறு

    ReplyDelete

Powered by Blogger.