Header Ads



சில ஜனாஸாக்கள் காத்திருப்பு - இடங்கள் ஒதுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிப்பு - எரிக்க முயன்றால் தடுத்து நிறுத்த வேண்டுகோள்


கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை, அடக்கம் செய்ய அனுமதிக்கும், வர்த்தமானி வெளியாகியுள்ள நிலையில் கொழும்பிலும், நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டு, மரணித்ததாக கூறப்படும் முஸ்லிம்களின்  ஜனாஸாக்கள் காத்திருப்பதாக அறிய வருகிறது.

கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள, உடல்களை அடக்கம் செய்வது குறித்து, அந்த உடல்களின் உறவினர்கள் வர்த்தமானியை காரணங்காட்டி, வைத்தியசாலை மற்றும் பொது சுகாதார அதிகரிகளுடன் உரையாடிய போதே, அவர்கள் வர்த்தமானி வெளியாகி இருந்தாலும், தமக்கு சுற்றுநிருபம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் எந்தப் பகுதியிலாவது, கொரோனா உடல்களை எரிப்பதற்கு முயற்சித்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் சென்று, சிங்கள மொழியிலான வர்த்தமானியை காண்பித்து,  ஜனாஸா எரிப்பை தடுத்து நிறுத்தமாறும்,  முஸ்லிம் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை, அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியான போதிலும், எந்த இடங்களில் உடல்களை அடக்கலாமென்ற விபரம் அல்லது அதுபற்றிய வழிகாட்டல்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் Jaffna Muslim இணையத்திற்கு சுட்டிக்காட்டினர்.


3 comments:

  1. Bring them to Addalaichenai. we welcome with open heart.

    ReplyDelete
  2. சில முக்கியமான விடயங்களை நித்திரையில் இருப்பவர்களுககு சொல்லி விளங்கப்படுத்த முடியாது. அதுபோல் விழித்துக் கொண்டு இருப்பவரகளுக்குக்கூட பல விடயங்களய் புரியவைக்க முடியாது. ஏனெனில் இரு சாராரும் மட்;டைமாடுகள். கொவிட்டினால் இறப்பவரகளின் உடல்களை எரிக்கத்தான் வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தல் வந்ததும் "எடுடா பிடிடா" என்று கூறி எரித்துவிட்டார்கள். இப்போது அவ்வாறு இறந்தவரகளை அடக்கவும் முடியும் என்ற வர்த்தமானி வந்ததும்; அவற்றை அடக்கம் செய்வதற்கு அறிவுறுத்தல் வேண்டும் என்று சொல்கின்றனர். இதனை அரசு சொல்லவில்லை. ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதனை அரசஅதிகாரிகள் அமுல்நடத்த எவ்வாறான முனைப்புக் காட்டுவார்களோ அவ்வாறே எல்லா வர்த்தமானி அறிவித்தல்களுக்கும் அந்த முனைப்பு கொடுக்கப்படல் வேண்டும். அல்லது அச்செயல் இலங்கை தண்டக்கோவையின்' அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றம் என்று எழுதப்படிக்கத் தெரிந்த பல கழுதைகளுக்குத் தெரியாமல் போனது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில் அவரகள் இன்னமும் இருட்டிற்றான் இருக்கின்றனர். பலவந்தமாகப் பறித்தெடுக்கப்பட்ட உரிமையினை திருப்பிக் கொடுப்பதற்கு என்ன நிபந்தனை வேண்டியிருக்கின்றது. வாயிருந்தால் பேசுவோம். பேனா இருந்தால் எழுதுவோம் நாவு இருந்தால் நக்குவோம் என்ற விவாதம் மலையேறுகின்றது என்பது பல அதிமேதாவிகளுக்கு இன்னமும் புரியவில்லலை.

    ReplyDelete
  3. We desperately waited for almost One year for the Decision to allow Burial. How much longer do we have to wait for the Regulations for Burial?

    But, the Decision to Cremate was made so fast that it took us All by Total Surprise and the Decision was made After the Demise of the First Muslim Covid-19 victim and the Cremation took place even Before the Publication of the Gazette regarding Cremation.

    Sri Lanka, the land that is Full of Surprises.

    ReplyDelete

Powered by Blogger.