Header Ads



முஸ்லிம் சட்டம் நீக்கப்பட வேண்டும், அடிப்படைவாத அமைச்சராக அலிசப்ரி, ஏனைய சட்டங்களை நீக்கத் தேவையில்லை


- நன்றி வீரகேசரி -

பெரும்பான்மையின மக்களினால் தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நீதியமைச்சர் அலி சப்ரி செயற்பட வேண்டும்.

முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கருத்து தெரிவிப்பதை அவர் தவிரத்துக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

முஸ்லிம் விவாக சட்டத்தை மேல் நாட்டு சட்டம், தேசவழமை சட்டம் ஆகிய பாரம்பரிய சட்டங்களுடன் ஒப்பிட முடியாது.

பௌத்த சாசனத்தை பாதுகாக்கவும், பௌத்த உரிமை பாதுகாக்கவும் இயற்றப்பட்ட சட்டங்களை நீக்க பௌத்த மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.

முஸ்லிம் சட்டத்தினால் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பதை  உறுதிப்படுத்த முடியும். இவ்விடயம் குறித்து நீதியமைச்சர் எம்முடன் நேரடியான பகிரங்க விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று -15- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முஸ்லிம் விவாக சட்டம் குறித்து அண்மையில் பாராளுமன்றில் உரையாற்றினேன். இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் விவாக சட்டம் குறித்து கருத்துரைக்கவில்லை.

மனித உரிமை கோட்பாட்டை முழுமையாக செயற்படுத்தும் போது மத காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க கூடாது. நான் குறிப்பிட்ட கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளை ஆகியோர் ஏற்றுக் கொண்டார்கள்.

நான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அலி சப்ரி நீதியமைச்சராக இருந்து பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அவர் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அமைச்சராக இருந்து பதிலளித்துள்ளமை கவலைக்குரியது.

முஸ்லிம் சமூகத்தின் மத்தியின் காணப்படும் தவறுகளை இவர் திருத்துவார் என எதிர்பார்த்தேன் ஆனார் இவரது செயற்பாடுகள் எதிர்பார்ப்புக்களை தோற்கடித்துள்ளது.

முஸ்லிம் விவாகசட்டத்தை நீக்க வேண்டுமாயின் கண்டி சட்டம், தேசவழமை சட்டம்,மேல்நாட்டு ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று நீதியமைச்சர் குறிப்பிட்ட கருத்தின் நோக்கம் நன்கு புலப்படுகிறது.

இச்சட்டங்களினால் மனித உரிமைகள் மீறப்படவில்லை.இவை நாட்டின் பொதுச்சட்டத்திற்கு  உட்பட்டதாக உள்ளது.ஆனால் முஸ்லிம் விவாக சட்டம் காதி நீதிமன்றத்தினால் செயற்படுத்தப்படுகிறது. இது ஒரு நாடு- ஒரு சட்டம் என்றகொள்கைக்கு முற்றிலும் முரணானது.

காதி நீதிமன்றினால் முஸ்லிம் பெண்களும், ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. ஆனால் தேசவழமை சட்டம், மேல்நாட்டு சட்டத்தினால் எவரும் பாதிக்கப்படவில்லை.

மகாசங்கத்தினருக்கு  பிரத்தியேகமாக நீதிமன்றம் ஏதும் உருவாக்கப்படவில்லை என்பதை நீதியமைச்சர் தெரிந்த்துக் கொள் ள வேண்டும்.ஆகவே முஸ்லிம் விவாக சட்டத்தை பௌத்த சாசனத்தையும், பௌத்த உரிமைகளையும் பாதுகாக்க உருவாக்கிய சட்டங்களுடன் ஒப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் அமைச்சர் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி  பொறுப்பான நீதியமைச்சர் என்ற அடிப்படையில் நீதியமைச்சர் அலி சப்ரி செயற்பட வேண்டும். இவ்விடயம் குறித்து பகிரங்க விவாதத்திற்கு  அழைக்கிறேன்.அனைத்து காரணிகளையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.

முஸ்லிம் விவாக சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதில் ஏனைய சட்டங்களை சார்பாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. என்றார்.

12 comments:

  1. போடா மொங்கா. இவன் கொலைத்து கொண்டு தான் இருக்கான்

    ReplyDelete
  2. ஆடு நனையுது என்று ஓநாய் அழுகிறது

    ReplyDelete
  3. முஸ்லிம்களிற்கு எதிராக தொடர்ந்தேர்ச்சியாக இனவாத விசமப் பிரச்சாரம் செய்துவரும் இந்த தேரர் பொய், அவதூறு என்பனவற்றை பரப்புரை செய்வதை தொழிலாகக் கொண்டுள்ளார்.(டாக்டர் சாபி விவகாரம்)
    இவர் மனித உரிமைகள் பற்றி பேசுவது வெட்கமாக உள்ளது.

    உண்மையில் இவர் பௌத்த தர்மத்திற்கே ஒரு அவமானம்

    ReplyDelete
  4. இரவு பகலாக பொய்யிலேயே காலம் போகுது!

    எந்த முஸ்லிமுக்கு முஸ்லிம் சட்டம் அநியாயம் செய்தது என்று கேட்டுத்தெரிந்து அவரைமட்டும் இஸ்லாத்தை விட்டு வெளியேரச்சொல்லவும்

    சுமார் 1.5 பில்லியன் முஸ்லிம் மக்களுக்கு விளங்காத மனித உரிமை மீறல் இந்த சாதுக்குமட்டும்தான் தென்பட்டுள்ளது!

    இன்று பூமியில் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் வாழவிரும்பும் மக்கள் அந்த வாழ்கை இஸ்லாமிய போதனையில் மட்டும்தான் பூரணமாக உள்ளது என்று சிந்திக்கும் மக்களிடம் வந்து இப்படியும் ஒரு பொய்யை !!!!! ?????

    ReplyDelete
  5. இவர் போன்ற சிலர் எதிர் மறையாகச் சிந்தித்து சிந்தித்து மன அமைதி இழந்து தவிக்கின்றனர். அலி சப்ரி அவர்களும் அடிப்படைவாதி என்றால் இலங்கையிலுள்ள அனைவரும் அடிப்படைவாதிகள் என்றாகிவிடும். முஸ்லிம் மக்களிடத்தில் ஹக்கீம் அவர்களை மாட்டி விடுவதற்கு ஏதோ ஒன்றை கோர்த்து விடுகிறார். இப்போ ஹக்கீம் அவர்கள் பாரம்பரிய முஸ்லிமாகி விட்டாரோ?

    ReplyDelete
  6. first of all have to remove your yellow cloth... then can think about the law matter

    ReplyDelete
  7. One country one law.if sinhalese do not allow to change muslims will also not.

    ReplyDelete
  8. ivanukku epavum sorichchal.....

    ReplyDelete
  9. You do not need to interfere in Muslim laws that is not relevant to you.
    You are racist your intention is remove Muslim laws that was used over 50 years.May Allaah punish this person in this world for his evil thoughts.

    ReplyDelete
  10. டேய்
    உன்னிடம் யார் நாங்களா முறையிட்டோம் முஸ்லிம் விவாகரத்துச் சட்டம் சரி இல்லை என்று?

    சும்மா பொத்திக்கிட்டுப் பேவியா.......

    ReplyDelete
  11. 8 வது பந்தியில்
    ரவூப் ஹக்கீம் பேசாது ஏற்றுக்கொண்டார் என்கிறார் ?????? !!!!!!! இந்த முஸ்லீம் கட்சிகளை நம்பும் மக்களே ! ?????

    ReplyDelete

Powered by Blogger.