Header Ads



யாழ்ப்பாணம் ஒஸ்மானியா, சிறந்த அதிபரை பெறட்டும்


யாழ் - ஒஸ்மானியாவில் கடந்த 2017 முதல் அதிபராக இருந்த சேகு ராஜிது பழைய மாணவர் சங்கம் மேற்கொண்ட புகார்கள் அடிப்படையில் மாற்றப்பட்டு புதிய அதிபராக கே. எம். அனீஸ் அவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார். 

அனீஸ், ஏற்கனவே இருந்த பாடசாலைகளில் திறமையாக செயற்பட்டு அந்தப் பாடசாலைகளின் கல்வி மட்டத்தை மேம்படுத்தினார் என  அதிபர் மாற்றத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்தோர் தெரிவித்துள்ளனர். 

இன்நிலையில் ஒஸ்மானியாவில் பழைய அதிபரை மாற்றிய விரக்தியில் சில  மாணவ மாணவிகள் யாழ் வைத்தீஸ்வரா, வேம்படி போன்ற பாடசாலைகளில் சேர்ந்து வருகின்றனர்.  மேலும் பலர் யாழ் மத்திய கல்லூரியில் சேர்வதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.  இவ்வாறான தகவல்கள் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழ்ந்தாலும் யாழ் முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி மட்டத்தை உயர்த்த வேண்டும், பாடசாலையின் பெயர் கல்வித்துறையிலும் விளையாட்டுத்துறையிலும் மீண்டும் மேலோங்க வேண்டும் என்று பண ரீதியாக சிந்தனா ரீதியாக பாடுபட்டுக் கொண்டிருப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

தூர நோக்கற்ற இவ்வாறான செயற்பாடுகள் யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் கல்வி நிலமையை இன்று கேள்விக் குறியாக்கி இருப்பதாக  கருதும் பெற்றோர்  தொடர் பிரச்சினைகள் கொண்ட பாடசாலையில் தமது பிள்ளைகள் கற்கத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியுள்ளது. 

இவை  கல்லூரியின் எதிர்காலத்தை மட்டும் பாதிக்கவில்லை. மீள்குடியேற்றச் செயற்பாடுகள், குடியேற்றத் திட்டங்கள், வாழ்க்கத்தர மேம்பாட்டு முயற்சிகள், எழுத்தறிவு வாசிப்பு திறன்கள் போன்றவற்றை முன்னேற்றுவதற்காகான அனைத்து துறைகளையும் பாதிப்புற வைத்துள்ளது. எதிர்கால ஒஸ்மானியாவின் விளையாட்டுத்துறைகளுக்கு மாணவர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது ஒரு புறமிருக்க திறமையான மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகுவது எதிர்காலத்தில் ஒஸ்மானியாவின் கல்விப் பெறுபேறுகள் மிக மோசமாக அமையப் போவதையும் காட்டி நிற்கின்றது.  ஒஸ்மானியாவை இருண்ட யுகத்துக்கள் நுளைத்த அந்த புத்திசாலிகளின் அறிவை என்னவென்பது. 

எனவே இவ்வாறான ஒரு நிலமைக்கு ஒஸ்மானியாவையும்  சமூகத்தையும்  இட்டுச் சென்றவர்கள் உடனடியாக சமூகத்திடம் மன்னிப்பு கேட்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டோம் என்ற உத்தரவாதத்தையும் அல்லாஹ் மீது சத்தியமிட்டுக் கூறவேண்டும். 

மேலும் மேற்படி மாற்றல்களுக்கும் குழப்பங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் காரணமானவர்கள்  தங்கள் காலத்தில் கல்வியில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்த வில்லை என்பதையும் ஒப்புக் கொண்டு எதிர்காலத்தில் புதியவர்களிடம் பொறுப்புக்களை ஒப்ப்டைக்க வேண்டும் என யாழ் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம். 

அத்துடன் புதிய அதிபரை பெற்றோர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வரவேற்பதில் தான் வீழ்த்தப் பட்டுள்ள ஒஸ்மானியாவை எழுச்சி பெறச் செய்வதற்கான வழி என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

வேற்றுமையில் சில விடயங்களில் ஒற்றுமை காண்பது தான் புத்திசாலிகளின் செயற்பாடாகும். கருத்து வேற்றுமையில் சமூக நலனுக்காக ஒற்றுமையாக செயற்படுபவன் இறைவிசுவாசியாவான். 

- யாழ் முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக் குழு -

No comments

Powered by Blogger.