Header Ads



பசில் - விமல் மோதல் நீண்டகாலமாக இருக்கின்றது - பொதுஜன பெரமுன அடுத்த தலைவராக கோட்டாபயவே வரவேண்டும்


மகிந்த காற்று என்ற செயல் திட்டத்தை விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன போன்றவர்களே ஆரம்பித்ததாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவங்சவை அரசாங்கத்தில் இருந்து விரட்டும் நடவடிக்கையானது ராஜபக்ச குடும்பத்தின் சதித்திட்டம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தள வாலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வந்தது விமல் வீரவங்ச என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பசில் மற்றும் விமல் வீரவங்ச இடையிலான மோதல் நீண்ட காலமாக இருந்து வருகின்ற ஒன்று.

விமல் வீரவங்ச அடுத்த தலைமைத்துவத்திற்கான பயணத்திற்கு வந்துள்ளார். ராஜபக்ச குடும்பத்தினர் இதனை பார்த்து அஞ்சுகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக கோட்டாபய ராஜபக்சவே வரவேண்டும். பசில் ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் மத்தியில் ஆதரவில்லை. இதனால் அவர் தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றவர் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. சிங்கள மக்களை இனவாத போதையில் வைத்திருக்கும் வரை இவ்வாதம் சரியானதே.

    ReplyDelete

Powered by Blogger.