Header Ads



அல் பலாஹ் கல்லூரியின் புதிய அதிபராக, ஹஸனுல் பஸரி கடமைகளை பொறுப்பேற்றார்

நீர்கொழும்பு கம்மல்துறையில்  அமைந்துள்ள அல் பலாஹ் கல்லூரியின் வளர்ச்சிக்கும். மேம்பாட்டுக்கும், கல்லூரியில் கல்வி கற்கும் எமது ஊர் மாணவ மாணவியர்களுக்கு  கல்விசார் வழிகாட்டுதலையும் செய்து குடுப்பதுடன் கலாசாலையின்   பௌதிக வளங்கள், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற   அனைத்து விதமான பங்களிப்பையும் அன்று முதல் இன்றுவரை  அல்பலாஹ் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர்கள் முன்னின்று  செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்த விடயம். இக் கலாசாலையின்  பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்களோடு எமது ஊரைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும், சமூக சிந்தனையாளர்கள் தனவந்தர்களும் அடிக்கடி தொடர்புகொண்டு பாடசாலையின் மேம்பாட்டுக்காக அவர்களால் முடிந்த உதவி ஒத்தாசைகள் செய்துவருவது இவ்விடத்தில் ஞாபகமூட்டி  நன்றி பாராட்டுவது தகும். கடந்த சில காலங்களாக பாடசாலைகள் மூடப்பட்டு இருந்தாலும் முடிந்தவரை அல்பலாஹ் மாணவர்களது கல்விக்கான செயல்திட்டங்களை ஆசிரியர்குலாம் சிறப்பாக செய்திருந்ததை தரம்5இன் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிப்படுத்தியது.  2021 ஜனவரி முதல் அல்பலாஹ் கல்லூரிக்கு புதிய அதிபராக ஹஸனுல் பஸரி  அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரது வருகையுடன் இன்ஷா அல்லா எமது கல்லூரி மேலும் பல முன்னேற்றகரமான பிரதிபலனை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் முக்கியமான  அதிபர் காரியாலயம் எமது பழயமாணவர்சங்க நிர்வாத்தின் பூரண பங்களிப்புடன் சிறப்பாக  புணர் நிர்மாணம் செய்யப்பட்டது.   கான்ஃபரன்ஸ்  மேசை, "கதிரை 10,  மற்றும் அதிபருக்கான கதிரை மேசை மற்றும் செயலாளர், பிரதி ,உதவி அதிபர், கணக்காளர்களுக்காக பிரத்தியேகமான காரியால அறையும் தயார் படுத்தப்பட்டு, சிவர்களுக்கான வர்ணம் அடிக்கப்பட்டு  பூரண படுத்தப்பட்ட நிலையில்  மேற் குறிப்பிடப்பட்ட தளபாடங்கள் அணைத்தும்  அதிபர்  அவர்களிம் கையளிக்கப்பட்டது. 

அதன்போது அல்பலா பழைய மாணவர் ஆல் பல பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டதையும் கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் எமது கல்லூரியின் வளர்ச்சிக்காக உங்களால் முடியுமான வற்றை முன்நின்று செய்வதற்கு எல்லாம் வல்ல அவ்வா அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை புரிவானாக போடு சாலையின் குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்கள் குறைபாடுகள் அதிகமாக இருப்பதனால் செய்து முடிந்தவர்கள் எமது கல்லூரியின் அதிபர் அல்லது அபிவிருத்திச் சங்கம் ஒரு பெயர்களை தொடர்பு கொண்டு நீங்களும் கல்விக்காக செலவு செய்து செலவு செய்து அதற்கான நற்கூலியை அல்லாஹ்விடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

தகவல்

M பாயிஸீன்

அல்பலாஹ் பழய மாணவர் சங்க ஊடகப் பிரிவு



No comments

Powered by Blogger.