Header Ads



பலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய சர்வதேச நீதிமன்றம் - அதிக அக்கறைக்குரியது என்கிறது அமெரிக்கா


சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், பலஸ்தீன வட்டாரங்கள் ‘தனது நீதி அதிகார வரம்புக்கு உட்பட்டவை’ எனத் தீர்ப்பளித்துள்ளது. அதன் மூலம், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் போர்க் குற்றங்கள் குறித்த புலனாய்வை நடத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீன மேற்குக் கரை, ஜெரூசலம், காசா உள்ளிட்ட பகுதிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரம்புக்குள் அடங்கும்.

பலஸ்தீன அதிகாரசபை, சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பினராக நீடிக்கிறது. ஆனால், இஸ்ரேல் அப்படி இல்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அது “தெளிவான யூத எதிர்ப்புவாதம்” என்று கண்டித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவு, அதிக அக்கறைக்குரியது என அமெரிக்கா குறிப்பிட்டது.

இஸ்ரேல், சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடாக இல்லை. ஆகவே, அதன் அதிகாரம் இஸ்ரேலைக் கட்டுப்படுத்தக் கூடாது என அமெரிக்கா குறிப்பிட்டது.

4 comments:

  1. நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி இடத்தில் மாத்திரம் நியாயமான நீதி எதிர்பார்க்க முடியும் மற்றவை எல்லாம் வெறும் கண்துடைப்பு

    ReplyDelete
  2. நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி இடத்தில் மாத்திரம் நியாயமான நீதி எதிர்பார்க்க முடியும் மற்றவை எல்லாம் வெறும் கண்துடைப்பு

    ReplyDelete
  3. சும்மா பேப்பர் ல கிறுக்கிவிட்டு மீடியா ல வடை சுடாம , இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா வுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா ????

    ReplyDelete
  4. The zionist entity is a Law unto itself. Having come to existence Because of the UN, it has NO Qualms about Defying its creator, the UN, thanks to the patronage of the sole Super Power, the USA.

    The zionist entity has ignored more than 200 Resolutions passed against it by the UN Security Council since its creation but NO Action has been taken against it by the UN on any of the Resolution.

    The zionist entity has scant regard for the UN and holds the UN in Utter Contempt. That means, the zionist entity Literally gets away with Murder.

    ReplyDelete

Powered by Blogger.