Header Ads



அமெரிக்காவும் ஜனாஸா நல்லடக்க அனுமதியை வரவேற்கிறது


கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பிற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

"கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் கட்டாய தகனத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரதமரின் அறிவிப்பு குறித்த ஊடக அறிக்கையை வரவேற்கிறோம். சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் திருத்தப்பட்ட நடைமுறையை நடைமுறைப்படுத்துவது ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.



2 comments:

  1. மகிழ்ச்சி. ராஜபக்ச அரசு சிற்றினங்களுக்கு எதிரான தனது தவறுகளில் ஒன்றை திருத்தி இருப்பது வரவேற்க்கத்தக்க முன்னேற்றமாகும். இந்த போக்கு தொடர வேண்டும்

    ReplyDelete
  2. 50 வருட அனுபவத்தில் முதல் காயை நகர்த்தியுள்ளார். வன்போக்காளர்களையும் ஒரு எட்டு நகர்த்தி வைத்துள்ளார்.

    ReplyDelete

Powered by Blogger.