Header Ads



நாடளாவிய முடக்கலை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளவில்லை - இராணுவத் தளபதி


புதிய கோவிட் வைரஸ் பரவலை அடுத்து நாட்டில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

புதிய கோவிட் வைரஸ் பரவல், இலங்கையின் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் முடக்கலை மேற்கொள்ள தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய கோவிட் வைரஸ் பரவல் கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பரவிய இந்த புதிய கோவிட் வைரஸ் தொற்று முதன்முதலாக இந்த ஆண்டிலேயே இலங்கைக்குள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய கோவிட் வைரஸ் தொற்று சுவீடன், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய இடங்களிலும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.

பி.1.258 என்ற வர்க்கத்தைச் சேர்ந்த இந்த புதிய கோவிட் வைரஸ் அதிகப்பரவல் தன்மையை கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments

Powered by Blogger.