Header Ads



நீர்கொழும்பில் கொரோனா எண்ணிக்கை 800 ஆக உயர்வு - தடுப்பூசி ஏற்றல் ஆரம்பம்


- இஸ்மதுல் றஹுமான் -

நீர்கொழும்பு பொது சுகாதார வைத்திய பிரிவில் கொரோனா தொற்றாலர்களின் எண்ணிக்கை 800 தாண்டியுள்ளது. கோவிட் 19 தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கை நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டதாக பிரதான பொது சுகாதார பரிசோதகர் என்.கே. யூ.கே.குணரத்ன தெரிவித்தார்.

நீர்கொழும்பில் முன்னக்கரை,பிடிப்பன பிரதேசங்களிலேயை தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். 16 ம் திகதி நீர்கொழுமொபில் 30 தொற்றாலர்களில் 27 பேர் பிடிப்பன பிரதேசத்தில் வசிப்பவர்கள். இங்கு 60 பேர் களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 27 பேர் தொற்றாலர்கள்.

இதன் அடிப்படையில் நீர்கொழும்பில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 802 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இப்பிரதேசத்தில் மூன்று கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

நீர்கொழும்பில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 521 நபர்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டடுள்ளதாக பிரதேச செயலாளர் அய்ஷா பதிரன தெரிவித்தார்.

இதேவேளை பொதுமக்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கை நேற்று நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

கடற்கரை தெரு பிரதேசத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தடுப்பசி

ஏற்றம் வேலை இன்று அலியபொல பிரதேசத்தில் ஏற்றவுள்ளனர். கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் கருமம் தொடரவுள்ளதாக குணரத்ன மேலும் தெரிவித்தார்.

30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கே ஊசி போடப்படுகின்றன.

இவ் வயதிற்கு இடைப்பட்டவர்களே பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்வதினால் முதல் கட்டமாக இவர்களுக்கு ஏற்றவடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.