- TM -
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து சிலர் தவறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் என, பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாதென தெரிவிக்கப்பட்டுவரும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என, அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இதனை விரும்பாத சிலர் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a comment