Header Ads



ஒவ்வொரு இலங்கையரும் 6 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கடனாளி - மத்திய வங்கி அறிக்கை

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி இருந்த மொத்தமான கடன் தொகை 14 ஆயிரத்து 605 பில்லியன் ரூபாய் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்த கடன் தொகையில் 8 ஆயிரத்து 258.9 பில்லியன் ரூபாய் தேசிய ரீதியில் செலுத்த வேண்டியது எனவும் 6 ஆயிரத்து 346.7 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு கடன் எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

இதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் செலுத்த வேண்டிய இருந்த கடன் தொகையின் அடிப்படையில், இலங்கையில் தனிநபர் கடன் 6 லட்சத்து 69 ஆயிரத்து 981 ரூபாய். இதில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 133 ரூபாய் உள்நாட்டு கடன். இலங்கையை சேர்ந்த அனைத்து பிரஜைகளும் இரண்டு லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் வெளிநாட்டுக்கு கடன்காரர்கள்.

தனி நபர் கடன் சுமை என்பது நாடு என்ற வகையில் பெற்றுக்கொள்ளும் முழு கடன் தொகை நாட்டில் வாழும் மொத்த சனத்தொகையின் அடிப்படையில் பிரிக்கும் போது தனி நபர் கடன் தொகை கணக்கிடப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் புள்ளவிபரத்திற்கு அமைய இலங்கையின் சனத் தொகை 21.8 மில்லியனாகும்.

2 comments:

  1. இலங்கையில் உள்ள எங்கள் ஒவ்வொருத்தரையும் நம்பி வெளிநாடுகள் இவ்வளவு பெரிய அளவில் கடன் கொடுத்துள்ளதை என்னி இலங்கையர் என்ற வகையில் பெருமையும் சந்தோசமும் அடைகிறோம்

    ReplyDelete
  2. I didn't take any loan from anyone, even from gov. Also I didn't ask/request all/any gov. to take any loan from anyone....guarantee

    ReplyDelete

Powered by Blogger.