Header Ads



இலங்கையில் தங்கம் உள்ள பகுதிகளின் விபரம், ஒரு தொன் பாறைக்குள் 5 முதல் 10 கிராம் - பேராசிரியர் அத்துல


சில பிரதேசங்களில் தங்கம் கண்டறியப்பட்டதை அடுத்து, நாட்டில் தங்க சுரங்க கைத்தொழில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கண்டறியப்பட்ட தங்கத்தின் அளவு ஒப்பீட்டளவில் அதிகமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒரு டன் பாறைக்குள் 0.5 கிராம் தங்கம் தங்கம் கிடைக்கின்றதுடன், ஆபிரிக்காவில் அந்த அளவானது, ஒரு டன் பாறைக்குள் 100 கிராம் ஆகும் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கமானது, ஒரு தொன் பாறைக்குள், 5 முதல் 10 கிராம் அளவில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுநேரம், 12,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலான நிலப்பகுதியில், விலைமதிப்புள்ள பாறைகள் உள்ள வலையமும் கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கியதாக இந்த வலையம் இருப்பதாகவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வலையத்தில் தங்கம், செப்பு, நிக்கல், இரும்பு உள்ளிட்ட அரிய உலலோகங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை, பதுளை, பண்டாரவளை, பலாங்கொடை, இரத்தினபுரி, எல்ல, வெல்லவாய, உசன்கொட மற்றும் சேருவாவில முதலான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளில், சிறு அளவில் தங்கம் கிடைத்துள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.