Header Ads



அரசாங்கத்தினால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக 4 மு.கா. Mp க்கள் தெரிவிப்பு, மன்னிப்புக் கோர விரும்புவதாகவும் உறுதிபடக் கூறினர்.


எங்களுடைய கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்தது சம்பந்தமாக உயர்பீடக் கூட்ட த்தில் விளக்கமளிப்பதற்காக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் அழைத்திருந்தோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் கூறியதாவது,

பிரஸ்தாப  பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் தங்களது சுய விளக்கங்களை அளித்தார்கள். தங்களது பிரதேசங்களிலும் அதேநேரம் தங்களுக்கு வாக்களித்த மக்கள் சார்பாகவும் சில விடயங்களை அரசங்கத்தினூடாகச் செய்து கொள்வதற்கான தேவைப்பாடு இருக்கின்ற விவகாரங்களைச் சாதித்துக் கொள்ளவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர்கள் கூறினர். அதேநேரம், கடந்த காலங்களிலும் மாறி மாறி அரசாங்கங்களுக்கு ஆதரவளித்திருந்த போதிலும்  வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்  அரசாங்கங்கள் தவறு விட்டிருக்கின்றன அந்த வகையில் தாங்கள் செய்தது தவறல்ல என்ற தோரணையிலும் பதிலளித்திருந்தார்கள்.

இருந்த போதிலும் குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் முழு நாட்டிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய மன உணர்வுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில், இந்த ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு முடிவுகாணாமல் இருக்கின்ற விவகாரத்திலும் தாங்கள் அந்தக் கோரிக்கையை முன்னிருத்தித்தான் இந்த 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு வாக்களித்ததாகவும், இருந்தும் தாங்கள் அரசாங்கத்தினால்  ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், அது குறித்து தாங்கள் உயர்பீடத்திலும், மக்களிடத்திலும் மன்னிப்புக் கோர விரும்புவதாகவும்  உறுதிபடக் கூறினர்.

அந்த அடிப்படையில் அதை அவர்கள் பகிரங்கமாக   செய்தியாளர் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொண்டு எடுக்கப்படுவதில்லை என்றும், தொடர்ந்தும் அவர்கள் அவ்வாறான சுய விளக்கத்தை மக்களிடத்தில் தாங்கள் விட்ட இந்த தவறுக்கான அந்த மன்னிப்பை கோருகின்ற சந்தர்ப்பத்தில், தொடர்ந்தும் கட்சியின் உறுப்பினர்களாக பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் ஒரே குழுவாக இருந்து இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதற்கான அந்த உறுதியையும் அவர்களிடத்திலிருந்து நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

கேள்வி: எதிர்காலத்தில் இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எப்படியிருக்கும்,

பதில்: அவர்கள் எவ்வாறு எதிர்காத்தில் கட்சியோடு சேர்ந்து பயணிக்கப் போகின்றார்களா இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் அந்த நடவடிக்கைகள் இனி தீர்மானிக்கப்படும்.

கேள்வி: திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இராஜினாமா கடிதம் கையளித்ததாக அறியக்கிடைத்திருக்கின்றது அது சம்பந்தமாக உங்களது பதில்? 

பதில்: இது சம்பந்தமாக தனது சுய விளக்கத்தை கொடுக்கின்ற போது கட்சிக்கு, தலைமைக்கு இது அபகீர்த்தியான விடயமாக வந்திருக்கின்றது என்பதை முன்னிட்டு தன்னுடைய உயர்பீடப் பதவியிலிருந்து சுயமாக விலகிக் கொள்கின்றேன் என்ற கடிதத்தை ஏற்கனவே என்னிடத்தில் தந்திருந்தார்.

கேள்வி: அந்த இராஜினாமா கடிதத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா?

பதில்: இந்த கூட்டத்தின் பிற்பாடு அது குறித்த தீர்மானத்தை நாங்கள் எடுக்கவில்லை. எல்லா உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து தலைமையோடு பயணிப்பது அவசியம் என்ற வலியுறுத்தலை உச்சபீட உறுப்பினர்கள் எல்லோரும் மிகத் தெளிவாக செய்திருக்கின்றார்கள். அதை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

17 comments:

  1. முஸ்லிம் காங்கிரஸ் இன் sanakkiyamaanasaha முஸ்லிம்கlaikaaddikkoduthaley எல்லா குழப்பங்களுக்குm kaaranam

    ReplyDelete
  2. don't believe them at all....better in next election, the people should not vote for them...

    ReplyDelete
  3. பிஞ்ச செருப்பால உங்களையும் உங்க கட்சி உறுப்பினரையும் நடு சந்தியில் வைத்து அடிக்கணும்!பிறகு உங்க கட்சிக்கு இன்னும் வாக்களிக்கிற மக்கள் அவங்களே அதே செருப்பால அவங்க தலையில அடித்து கொள்ளணும்.

    ReplyDelete
  4. The All Important question is whether the Party took a decision to vote Against the 20A or Not. Once that decision is taken, there is No question of any MP voting contrary to that decision.

    Any MP who contravened the Party decision must be dealt with Sternly and No Justification for violating Party Decision should be accepted and the concerned MPs should be dealt with sternly to ensure Party Discipline.

    Will the Party leader, Mr. Rauf Hakeem, announce publicly what was the Party Decision on the issue of Voting on 20A? He owes a sacred Duty to the Party to announce that Decision if he is serious about the Party Image.

    ReplyDelete
  5. All Traitors Getting ready for another Drama.
    We Muslims don't need them now... Don't need Useless Muslim Congress and All Traitors for our community....

    ReplyDelete
  6. Fool politicians. If some one say we will do it. Ask them to authorize burial first and then support. Since this is most hurtful to Muslim society. Each and every village has been affected by the government racist decision without any science behind it.

    ReplyDelete
  7. நாங்கள் எதிர்பார்த்ததுதான் தலைவர் எவ்வழியோ (18) அவ்வழியே சீடர்களும்.

    ReplyDelete
  8. எமது அரசியல் தலைவர்களை நினைக்கும் போது தலைகுனிய வேண்டி உள்ளது .
    *20வது அரசியல் அமைப்பிற்கு ஆதரவு அளித்தால் தான் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிப்போம்* என்று உங்களிடம் கூறியுள்ளார்கள் அப்போதே நீங்கள் உணரவில்லையா இந்த அரசாங்கம் வேண்டுமென்றே தனது காரியத்தை சாதிப்பதற்காக ஜனாஸாக்களை எரிகின்றது என்பது?

    இப்படிப்பட்ட சுயநலவாத அரசாங்கம் எமது மார்க்க விழுமியங்களுடன் விளையாடுகிறது என்பதை அறிந்தும் நீங்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தது இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கு மாத்திரமன்றி உலக முஸ்லிம் சமூகத்துக்கும் நீங்கள் செய்த துரோகம். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை நம்புவதில் இருந்து இனியாவது எம் சமூகம் விழித்தெழுமா?

    ReplyDelete
  9. அட நா... முதலில் மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா பின்னர் உங்களின் அணைத்து பதவிகளில் இருந்து விலகல் அதன் பின்பு மன்னிப்பு கேளுங்கள் அப்படி செய்தால் தான் நீங்கள் எல்லோரும் மனிதர்கள் இல்லை என்றால் ............. தான்

    ReplyDelete
  10. MUNAFIQS and their LEADER with covering their faces. Let Allah deal with the things they do.Hasbunallah wanimal waqeel.

    ReplyDelete
  11. They said that they supported to 20A with the permission from Sanakkiyam Rauf. What do you say about this?

    ReplyDelete
  12. Remove from the party. Specially the appointed one. They were transgressed.

    ReplyDelete
  13. suththa munafiqukala katchikkul vaiththukkondu makkaloadap paiththiyam vilayaaduraanka???

    ReplyDelete
  14. நீங்கள் முஸ்லிம் சமுகத்துக்கு துரோகம் செய்து விட்டீர்கள்.உண்மையான முஸ்லீம்களாயிரூந்தால் எப்போதோ எங்கள் ஜனாஸா எரிப்பை எதிர்த்து ராஜினாமா செய்திருப்பீர்கள் உங்களை இன்னும் நம்புவது வேஸ்ட்.உண்மையில் சோரம் போகாமல் இருந்திருந் தால் நிச்சயமாக எதிர்த்திருப்பீர்கள் பாராளுமன்றில் சாணக்கியனுக்கு வீரமாக பேச முடியும் என்றால், நீங்களும் நேர்மையாக இருந்திருந்தால் கட்டாயம் எதிர்த்துப் பேசி இருக்கலாம்.இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.மறந்து விட வேண்டாம்.

    ReplyDelete
  15. செய்றத எல்லாம் செய்து போட்டு, தெரியாம செய்துவிட்டோம் என்கிறதும், மன்னிப்புக் கேக்கிறதும் ஒங்களுக்கு என்ன புதுசா?

    ReplyDelete

Powered by Blogger.