Header Ads



இதுவரையில் 350 க்கும் மேற்பட்ட, ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுள்ளன - ஆசாத் சாலி


கொரோனா தொற்றினால் மரணித்ததாக குறிப்பிட்டு, இலங்கையில் இதுவரை 350 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளன என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி குறிப்பிட்டார்.

 இதுதொடர்பில் அவர் கூறியதாவது:

சர்வதேச அழுத்தம் காரணமாகவே, இலங்கை அரசாங்கம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாமென தற்போது அறிவித்துள்ளது. 

வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதற்காக யாரும் அதை கொண்டாடத் தேவையில்லை. நிபுந்தனையுடன்தான் இது தரப்பட்டுள்ளது. எங்கள் உரிமையை அபகரித்துவிட்டு அதில் கொஞ்சத்தைதான் தற்போது தந்துள்ளனர்.

 நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 459 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் 350 க்கும் 380 க்கும் இடையிலான முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளன என்ற தகவலும், கிடைத்துள்ளது என Jaffna Muslim ஆசாத் இணையத்திடம் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. தம்பி ராசா கொஞ்சம் சும்மா இரிடாபா.எப்படியாவது விசயம் நடக்கட்டும். நீங்கள் தான்டா சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.