Header Ads



3/2 பெரும்பான்மை பலம் கிடைத்த, சகல அரசுகளும் தோல்வியடைந்தன - அலி சப்றி


இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்ட அனைத்து அரசாங்கங்களும் தோல்வியடைந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் இந்த உண்மையை புரிந்துகொண்டு அதனை எதிர்கொள்ள வேண்டும் எனவும் நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆட்சி முறையா அல்லது பிரதமர் ஆட்சி முறையா என்பது பிரச்சினையல்ல. அது அந்த நபரிடம் இருக்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்ட அனைத்து அரசாங்கங்களும் தோல்வியை தழுவின.

இதனை நாமும் புரிந்துக்கொள்ள வேண்டும். 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் முதலாவது ஜனநாயக தேர்தலிலேயே தோற்று போயினர். தற்போது 30 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போனது.

அதிகாரம் அல்ல, இது தான் யதார்த்தம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டுமாயின் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். 77 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன ஆட்சிக்கு வந்து, இனிமேல் ஐக்கிய தேசியக் கட்சியை எப்போது தோற்கடிக்க முடியாது என நினைத்து விகிதாசார தேர்தலை அறிமுகம் செய்தார்.

இறுதியில் இந்த விகிதாசார தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்பட்டு, அந்த கட்சி இல்லாமல் போயுள்ளது எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இந்த அரசாங்கம் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்து விட்டது.
    மக்களை இனம் மதம் கடந்து ஒன்றிணைப்பதில் பாரிய தவறு செய்துவிட்டது. பொதுவான பிரச்சினைகளை (கொரோனா போன்றது ) இனவாத சிந்தனை கொண்டு அணுகி இன்று விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தோல்வியில் முடிந்துள்ளது இந்த அரசாங்கம் . 73 வருடங்களில் முதல் முதலாக சோபை இழந்த சுதந்திர தினமாக இந்த வருடம் வேண்டா வெறுப்பாக மக்கள் மத்தியில் காணப்பட்டது . நாட்டின் பொருளாதாரம் ஆதி மட்டத்துக்கு சென்றுவிட்டது. இலங்கை ரூபாய் எதிர்பாராத வீழ்ச்சியில் இருக்கின்றது. ரகசியமாக முதலீடு செய்ய வந்த வெளிநாடுகள் வெளிப்படையாகவே இலங்கையில் நிலப்பரப்பில் பங்கு கேட்டு மிரட்டுகின்றன .

    ReplyDelete
  2. Hon. Ali Sabry,
    Your statement, “இலகு மற்றும் குறைந்த செலவு முறையும் அவசியம்” ("Easy and low cost system is essential") is most welcome please, Insha Allah.

    IF THE FOLLOWING CAN ALSO BE DONE, I DO NOT THINK THE PRESENT GOVERNMENT WILL FAIL AT ALL, Insha Allah.

    “The Muslim Voice” kindly requests you Hon. Minister of Justice, to bring in regulations and make it law on the following:
    1. All Attorneys-at-Law should account for their earnings and issue official receipts for the fees that they take from clients.
    2. NO transaction either by cash or cheque should be undertaken without the issue of an official receipt between the client and a lawyer in discharging the duty as a legal counsel or solicitor.
    3. If a trial date is fixed in court and the bench/judge postpones the case to be take on another date, the legal counsel or solicitor should not charge the client any fees due on that date to him, but only charge fees for appearing on the next date.
    4. A MAXIMUM and MINIMUM charge for the different types of court cases as counsel/solicitor charges/fees/dues should be stipulated and made law, for all those practicing law as counselors or solicitors.
    5. All lawyers, legal counselors whether they are Proctors, Attorney-at-Law, Advocates, Solicitors or Presidents Counsels, should officially declare their “PROFESSIONAL INCOME” and file annual returns with the Inland Revenue Department and pay any taxes due on their earnings.
    These regulations have to be incorporated in the laws of Sri Lanka and be “embedded” in the new constitution for the benefit of the “CITIZENS” of our “maathruboomiya.
    The Hon. Minister’s response/comments to this humble suggestion/proposal by a citizen of Sri Lanka is much awaited please, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.