Header Ads



எந்தவொரு தடுப்பூசியையும் தயாரிக்கக் குறைந்தது 3 அல்லது 5 வருடங்கள் தேவை - Dr ஹரித


கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் செலுத்தப்படமாட்டாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் கொரோனா தடுப்பூசியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசியில் பல சிக்கல்கள் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கத் தடுப்பூசி மாத்திரமே தீர்வு.

உலகில் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் தயாரிக்கக் குறைந்தது 3 அல்லது 5 வருடங்கள் எடுத்துள்ளது ஆனால் குறித்த தடுப்பூசி தயாரிக்க ஒருவருடமே எடுத்துள்ளது இதனால் மக்களின் பாதுகாப்பு 5 மாதங்களா அல்லது அதற்கு மேல் செல்லுமா என உறுதியாகச் சொல்ல முடியாது

அத்துடன், குறித்த தடுப்பூசியில் நன்மை தீமை இரண்டும் உண்டு.

ஏனைய தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது கோவ்ஷீல்ட் தடுப்பூசியிலிருந்து வரும் பக்க விளைவுகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நீங்கள் ஒன்றையும் செய்யவும் மாட்டீங்க அடுத்தவங்கள செய்ய விடவும் மாட்டீங்கடா. குறை சொல்றதிலேயே குறியா இரிங்க.நீங்கள் உடலை எரிக்கிறதா புதைக்கிறதா என்று இன்னும் முடிவெடுக்க இல்லை. பக்கத்து நாடு தடுப்பூசி அனுப்பிட்டுடா.

    ReplyDelete

Powered by Blogger.