Header Ads



இதுவரை 280 முதல் 300 ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுள்ளன - ஆசாத் சாலி


கொரோனா தொற்றினால் மரணித்ததாக தெரிவித்து, இதுவரை 280  தொடக்கம் 300 முஸ்லிளுடைய ஜனாஸாக்கள், பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி Jaffna Muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

இம்ரான்கான் இலங்கைக்கு வர இருக்கிறார். அவரது வருகைக்காக பிரதமர் மேற்கொண்ட நாடகமாகவே, நாங்கள் ஜனாஸாக்களை நல்லடக்கலாம் என பிரதமர் அறிவித்துள்ள தகவலை நோக்குகிறோம். 

அவ்வாறே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வும் ஆரம்பமாகவுள்ளது. அதில் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென, ஒரு பரிந்துரையும் முன்வைக்கப்பட இருந்தது. 

இவற்றை கவனத்திற் கொண்டுதான், உடல்களை அடக்கலாமென பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம்  ஏற்கனவே சர்வதே விவகாரமாகி விட்டது. நாங்கள் 40 நாடுகளின் கவனத்திற்கு இதனை அறிக்கை வடிவில் சமர்ப்பித்திருந்தோம் எனவும் ஆசாத் சாலி Jaffna Muslim இணையத்திடம் மேலும் சுட்டிக்காட்டினார்.

2 comments:

  1. There is nothing to do with Mr. Imran Khan's visit.
    This is a victory of P2P. Unity of Tamils.

    Now we have to be very careful they will create Hindu Muslim problem in future to break the Unity again. Wait and see

    ReplyDelete
  2. Gazzete will be released after 22+ amendment...??? hahahaha

    ReplyDelete

Powered by Blogger.