Header Ads



25 இந்திய விமானங்கள், இலங்கை வருகை


இலங்கை விமானப்படையானது, தனது 70ஆவது ஆண்டு நிறைவை இன்று முதல் கொண்டாடவுள்ளது. பிரதான வைபவம் காலி முகத்திடலில், 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது.

 இதன்போது, விமானப்படையின் இல. 5 தாக்குதல் ஸ்குவாட்ரன், இல. 6 தாக்குதல் ஸ்குவாட்ரனின் ஜனாதிபதி வர்ண விருதுகள் வழங்கும் விழாவும் இடம்பெறவுள்ளது. 

அந்தவகையில், குறித்த வரலாற்று நிகழ்வை நினைவுகூருவதற்காக விமான அணிவகுப்பு, சாகச நிகழ்வுகள் பாரியளவில் முதன்முறையாக முன்னெடுக்கப்படவுள்ளன. 

இந்நிலையில், இரண்டு நாடுகளுக்கிடையிலான மற்றும் இராணுவங்களுக்கிடையிலான நெருங்கிய ஆண்டுக்கணக்கான தொடர்பாடல்களை நினைவுகூரும் வகையிலும், ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் குறித்த நிகழ்வில் இந்திய விமானப்படையும், கடற்படையும் பங்கேற்கவுள்ளன. 

இவை மேம்பட்ட இலகுரக ஹெலிகொப்டரான சரங்க், ஹவாக்ஸ் சூர்ய கிரண், தேஜாஸ் தாக்குதல் விமானம், தேஜாஸ் பயிற்சி விமானம், டொர்னியர் கடல் ரோந்து விமானத்துடன் மொத்தமாக 23 விமானப்படை, கடற்படை விமானங்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளன.

 அந்தவகையில், விமானக் கண்காட்சிக்கான விமானங்கள், இந்திய விமானப்படையின் சி17 குளோப் மாஸ்டர், சி120ஜெ போக்குவரத்து விமானங்களுடன் கொழும்பை நேற்று முன்தினம் வந்தடைந்திருந்தன. 

கண்காட்சியிலுள்ள அனைத்து இந்திய விமானங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். 

1 comment:

  1. அடுத்த வருஷம் சீனா

    ReplyDelete

Powered by Blogger.